அஜீத் அப்போது புஷ்டியாக இருந்திருந்தால் நல்லா இருந்திருக்கும்- பேரரசு

இயக்குனர் பேரரசு ஒரு காலத்தில் விஜய்யின் படங்களை அனல் பறக்க வைத்தவர். திருப்பாச்சி, சிவகாசி,திருப்பதி,திருவண்ணாமலை,தர்மபுரி, பழனி, திருத்தணி என்று ஊர் பெயரில் படத்தின் பெயரை வைத்து படங்களையும் கமர்ஷியல் ஹிட்டாக்கியவர். அஜீத்தை வைத்து திருப்பதி படத்தை இயக்கியபோது உள்ள அனுபவங்களை ஒரு வார இதழின் இணைய பக்கத்துக்கு பேட்டி அளித்துள்ளார். அஜீத் திறமையான நடிகர். நான் ஜனவரியில் ஆரம்பித்து ஏப்ரல் 14ல் படத்தை வெளியிட்டு விட்டேன். படம் தயாரித்த ஏவிஎம் நிறுவனத்துக்கு நான் முன்னதாகவே பர்ஸ்ட் காப்பி
 

இயக்குனர் பேரரசு ஒரு காலத்தில் விஜய்யின் படங்களை அனல் பறக்க வைத்தவர். திருப்பாச்சி, சிவகாசி,திருப்பதி,திருவண்ணாமலை,தர்மபுரி, பழனி, திருத்தணி என்று ஊர் பெயரில் படத்தின் பெயரை வைத்து படங்களையும் கமர்ஷியல் ஹிட்டாக்கியவர்.

அஜீத் அப்போது புஷ்டியாக இருந்திருந்தால் நல்லா இருந்திருக்கும்- பேரரசு

அஜீத்தை வைத்து திருப்பதி படத்தை இயக்கியபோது உள்ள அனுபவங்களை ஒரு வார இதழின் இணைய பக்கத்துக்கு பேட்டி அளித்துள்ளார்.

அஜீத் திறமையான நடிகர். நான் ஜனவரியில் ஆரம்பித்து ஏப்ரல் 14ல் படத்தை வெளியிட்டு விட்டேன்.

படம் தயாரித்த ஏவிஎம் நிறுவனத்துக்கு நான் முன்னதாகவே பர்ஸ்ட் காப்பி கொடுத்துவிட்டேன். திருப்பதி வசூலில் குறை வைக்கவில்லை.

அந்த நேரத்தில் அஜீத் சார் நான் கடவுள் படத்தில் நடிப்பதற்காக பெரிய முடிவைத்திருந்தார். ஒல்லியான உடலோடு இருந்தார்.

ஷூட்டிங் கொஞ்சம் தாமதமாகும் என தெரிந்ததால் திடீரென குறுகிய கால படமாக அஜீத் நடித்ததுதான் திருப்பதி. எல்லா வகையிலும் இப்படம் எனக்கு திருப்தி அளித்தது.

ஆனால் அந்த நேரத்தில் நான் கடவுள் படத்தில் நடிக்க இருந்ததால் அவசர அவசரமாக இந்த படத்தை முடித்தேன்.

பிறகு அந்த படம் சில காரணங்களால் ட்ராப் ஆனபோது வருத்தப்பட்டேன். இது முன்னாலேயே தெரிந்திருந்தால் கொஞ்சம் அவசரமில்லாமல் இன்னும் படத்தை மெருகேற்றியிருக்கலாம் அஜீத் சார் அந்த படத்துல நான் கடவுள் படத்துக்காக ஒல்லியா இருப்பார். கொஞ்சம் புஷ்டியாகவே அஜீத்தை காண்பித்திருக்கலாமே என ஒரு சின்ன வருத்தம் இருந்தது.

From around the web