அஜித்-சுதா கொங்காரா படம்: தயாரிப்பது யார்?

 

அஜித் நடித்து வரும் ’வலிமை’ படத்தின் படப்பிடிப்பு இவ்வருட இறுதிக்குள் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை சுதா கொங்கரா தான் இயக்கப் போகிறார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது 

இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகளை சுதா கொங்கரா ஆரம்பிக்கலாம் என அஜித் அனுமதி அளித்து விட்டதாகவும் இதனை அடுத்தே இந்த படத்தின் பணிகள் தொடங்க இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது

இந்த நிலையில் இந்த படத்தை முதலில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தில் ஸ்ரீ கோகுலம் மூவிஸ் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும் இந்த தகவலும் வதந்திதான் என்று தெரிகிறது

இந்நிலையில் இந்த படத்தை மீண்டும் போனி கபூரே தயாரிக்க இருப்பதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே நேர் கொண்ட பார்வை, வலிமை ஆகிய அஜித் படங்களை தயாரித்த போனிகபூர், இந்த படத்தையும் தயாரிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

From around the web