அஜித்தின் ரகசிய கண்காணிப்பு: தமிழ் நடிகை கூறிய அதிர்ச்சி தகவல்

தல அஜித் தனது ரசிகர் மன்றத்தையே கலைத்தார் என்பது தெரிந்ததே. அப்படி இருக்கும்போது அவர் சமூக வலைதளங்களில் கணக்கு தொடங்குவது என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. இந்திய திரையுலகிலேயே பெரிய நடிகர் ஒருவர் சமூக வலைதளங்களில் கணக்கு வைக்காதவர் அனேகமாக அஜித் ஒருவராகத்தான் இருக்கும் இந்த நிலையில் அஜீத் சமூகவலைதளத்தில் கணக்குகள் வைக்கவில்லை என்றாலும் தொடர்ந்து சமூக வலைதள பதிவுகளை ரகசியமாக கண்காணித்து வருவதாகவும் குறிப்பாக தன்னைப் பற்றி வரும் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் கருத்துக்களை
 

அஜித்தின் ரகசிய கண்காணிப்பு: தமிழ் நடிகை கூறிய அதிர்ச்சி தகவல்

தல அஜித் தனது ரசிகர் மன்றத்தையே கலைத்தார் என்பது தெரிந்ததே. அப்படி இருக்கும்போது அவர் சமூக வலைதளங்களில் கணக்கு தொடங்குவது என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. இந்திய திரையுலகிலேயே பெரிய நடிகர் ஒருவர் சமூக வலைதளங்களில் கணக்கு வைக்காதவர் அனேகமாக அஜித் ஒருவராகத்தான் இருக்கும்

இந்த நிலையில் அஜீத் சமூகவலைதளத்தில் கணக்குகள் வைக்கவில்லை என்றாலும் தொடர்ந்து சமூக வலைதள பதிவுகளை ரகசியமாக கண்காணித்து வருவதாகவும் குறிப்பாக தன்னைப் பற்றி வரும் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் கருத்துக்களை அவர் பார்த்து வருவதாகவும் தெரிகிறது

இந்த தகவலை அஜித்துடன் நடித்த நடிகை பிரியதர்ஷினி தெரிவித்துள்ளார். அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்தவர் பிரியதர்ஷினி. இவர் ஏற்கனவே விஜய் சேதுபதியுடன் கவண் என்ற திரைப்படத்திலும் நடித்து இருக்கிறார்

நடிகை பிரியதர்ஷினி நேர்கொண்டபார்வை திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது அஜித்துடன் பேசியபோதுதான் சமூக வலைதளங்களை அவர் ரகசியமாகக் கண்காணிக்கும் தகவலை தெரிந்து கொண்டாராம். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்ததை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web