வலிமை படம் பற்றி ரசிகர்களுக்கு அஜீத் விடுத்த தற்போதைய கோரிக்கை
தல அஜித் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர், இவருக்கு தமிழகம் முழுவதிலும் அதிகப்படியான ரசிகர்கள் உள்ளனர்.
Wed, 6 Jan 2021

அந்த வகையில் சென்ற வருடம் இவர் நடிப்பில் வெளியான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட திரைப்படங்கள் பெரிய வசூல் செய்து சாதனை படைத்தது.
மேலும் தற்போது இவர் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மிக பெரிய அளவில் உள்ளது.
சமீபத்தில் இப்படத்தில் இருந்து அவரின் குடும்ப புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களிடையே பெரிய அளவில் வைரலானது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவும் ஆரம்ப கட்டத்தில் தல அஜித் "ஒன்றும் அவசர பட வேண்டும், நமது படம் பார்க்கும் ஒரு ரசிகருக்கு கூட கொரோனா வர கூடாது" என கூறினாராம்.