அரசியல் களத்தில் அஜித்தும் இறங்குகிறாரா?

கோலிவுட் திரையுலகில் இருந்து ரஜினி, கமல் உள்பட பல திரைநட்சத்திரங்கள் அரசியல் களத்தில் குதித்துள்ள நிலையில் அஜித், விஜய் ஆகியோர் எப்போது அரசியல் பக்கம் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களிடையே இருந்து வருகிறது. இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படம் பரபரப்பான அரசியல் படம் என்றும், இந்த படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அவருடைய அடுத்த நடவடிக்கை இருக்கும் என்று கூறப்படுகிறது. சிவா இயக்கத்தில் ‘விசுவாசம்’ படத்தில் நடிக்கவிருக்கும் அஜித், அடுத்ததாக பிரபுதேவா இயக்கத்தில் நடிக்கவுள்ள
 

கோலிவுட் திரையுலகில் இருந்து ரஜினி, கமல் உள்பட பல திரைநட்சத்திரங்கள் அரசியல் களத்தில் குதித்துள்ள நிலையில் அஜித், விஜய் ஆகியோர் எப்போது அரசியல் பக்கம் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களிடையே இருந்து வருகிறது.

இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படம் பரபரப்பான அரசியல் படம் என்றும், இந்த படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அவருடைய அடுத்த நடவடிக்கை இருக்கும் என்று கூறப்படுகிறது.

சிவா இயக்கத்தில் ‘விசுவாசம்’ படத்தில் நடிக்கவிருக்கும் அஜித், அடுத்ததாக பிரபுதேவா இயக்கத்தில் நடிக்கவுள்ள படம் தான் இந்த அரசியல் படம். இந்த படத்தில் அனல் கக்கும் வசனங்களை ‘அறம்’ இயக்குனர் கோபி நயினார் எழுதவுள்ளார். இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web