ரஜினி திட்டமிட்டிருந்த இயக்குனரை வளைத்துப் போட்ட அஜித்? பரபரப்பு தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ’அண்ணாத்த’ திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் கொரோனா வைரஸ் லாக்டவுன் முடிந்தவுடன் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவது யார் என்ற கேள்விகள் கோலிவுட்டில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. கமலஹாசன் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள திரைப் படத்தில் ரஜினி நடிப்பார் என்று கூறப்பட்டாலும் இந்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. மேலும்
 

ரஜினி திட்டமிட்டிருந்த இயக்குனரை வளைத்துப் போட்ட அஜித்? பரபரப்பு தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் ’அண்ணாத்த’ திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் கொரோனா வைரஸ் லாக்டவுன் முடிந்தவுடன் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவது யார் என்ற கேள்விகள் கோலிவுட்டில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. கமலஹாசன் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள திரைப் படத்தில் ரஜினி நடிப்பார் என்று கூறப்பட்டாலும் இந்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. மேலும் கேஎஸ் ரவிக்குமார் உள்பட பலர் ரஜினிக்காக காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ திரைப்படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ரஜினி ஒரு படத்தில் நடிக்க முடிவு செய்திருப்பதாகவும் அதுதான் அவரது அடுத்த படமாக இருக்கும் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் திடீரென அஜித்திடம் தேசிங்கு ராஜா அழைப்பு வந்ததாகவும், அவர் அஜித்தை நேரில் சென்று பார்த்து கதை கூறியதாகவும் அந்த கதை அஜித்துக்கு பிடித்து விட்டதால் ’வலிமை’ படத்தை அடுத்து அந்த படத்தை தொடங்கலாம் என்று அஜித் உறுதிகூறி இருப்பதாகவும் கூறப்படுகிறது

எனவே ரஜினி நடிக்க திட்டமிடப்பட்டிருந்த இயக்குனரை அஜீத் திடீரென வளைத்து போட்டு விட்டதாக கோலிவுட்டில் ஒரு வதந்தி பரவி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web