ஆஜித், ஷிவானியை அப்புறம் பார்த்து கொள்ளலாம், அனிதாவை வெளியேற்றுங்கள்: நெட்டிசன்கள் தீவிரம்

 

பிக்பாஸ் வீட்டை பொருத்தவரை அமைதியாக எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் இருப்பவர்களை விட ஆர்ப்பாட்டமாக விளையாடுபவர்கள் தான் வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் மிகவும் நன்றாக விளையாடிய போதிலும் ஏதாவது ஒரு இடத்தில் சிறு அளவில் சறுக்கினாலும் அவர்களுக்கு கெட்ட பெயர் வந்து வெளியேற்றப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது 

பிக்பாஸ் வீட்டில் நன்றாக விளையாடி கொண்டிருந்த சம்யுக்தா, ஆரியை தவறாக பேசியதாக வெளியேற்றப்பட்டார். அதேபோல்தான் நிஷா, அர்ச்சனா ஆகியோர்களும் நன்றாக விளையாடியபோதிலும் வெளியேற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

anitha

இவர்களை விட மோசமாக விளையாடி கொண்டிருப்பவர்கள் எல்லாம் அமைதியாக இருப்பதன் காரணமாக பிக்பாஸ் வீட்டில் இன்னும் நீடித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த வாரமாவது ஷிவானி அல்லது ஆஜித்தை பார்வையாளர்கள் வெளியேற்றுவார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென அனிதா தேவையில்லாமல் ஆரி மீது கோபப்பட்டு வாண்டட் ஆக தற்போது மாட்டி கொண்டார்

ஷிவானி, ஆஜித்தை கூட அப்புறம் பார்த்துக்கொள்ளலாம், முதலில் அனிதாவை வெளியேற்றுவோம் என்று நெட்டிசன்கள் கங்கணம் கட்டிக்கொண்டு கிளம்பியுள்ளனர். மேலும் அனிதாவுக்கு யாரும் ஓட்டுப் போடப் போவதில்லை என்று நெட்டிசன்கள் கூறியுள்ளதை அடுத்து அவர் இந்த வாரம் வெளியே வர அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது 

தன்னுடைய குடும்பத்தினரை பற்றி பேசியதாக ஆரி மீது அனிதா கடும் கோபமடைந்தார். நேற்றைய நிகழ்ச்சியின் முடிவில் ஆரி, கேமரா முன் சென்று அனிதாவின் குடும்பத்தினரை பற்றி தவறாக பேசவில்லை என்றும் அப்படியே பேசியிருந்தால் அவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web