அமைச்சர் பாராட்டிய அஜீத் பாட்டு

கடந்த பொங்கலுக்கு வெளியான திரைப்படம் விஸ்வாசம். அஜீத் ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்பட்ட இப்படத்தில் பாடல்களும் மிக வெகுவாக பேசப்பட்டது. இப்படத்தில் இடம்பெற்ற வேட்டிக்கட்டு பாடல் கலக்கல் ரகம் என்றால் கண்ணான கண்ணே என்ற பாடல் மிக இனிமையான பாடலாக சிறுவர் முதல் பெரியவர்கள் வரை கவர்ந்தது. இந்நிலையில் இப்பாடலை அமைச்சர் மாஃபா பாண்டியரான் வெகுவாக பாராட்டியுள்ளார். இமான் இசையமைத்த இப்பாடலை கவிஞர் தாமரை எழுதி இருந்தார். சென்னையில் உள்ள எத்திராஜ் கல்லூரியில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் தமிழ்
 

கடந்த பொங்கலுக்கு வெளியான திரைப்படம் விஸ்வாசம். அஜீத் ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்பட்ட இப்படத்தில் பாடல்களும் மிக வெகுவாக பேசப்பட்டது. இப்படத்தில் இடம்பெற்ற வேட்டிக்கட்டு பாடல் கலக்கல் ரகம் என்றால் கண்ணான கண்ணே என்ற பாடல் மிக இனிமையான பாடலாக சிறுவர் முதல் பெரியவர்கள் வரை கவர்ந்தது.

அமைச்சர் பாராட்டிய அஜீத் பாட்டு

இந்நிலையில் இப்பாடலை அமைச்சர் மாஃபா பாண்டியரான் வெகுவாக பாராட்டியுள்ளார். இமான் இசையமைத்த இப்பாடலை கவிஞர் தாமரை எழுதி இருந்தார்.

சென்னையில் உள்ள எத்திராஜ் கல்லூரியில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் தமிழ் அகராதி விழிப்புணர்வு கருத்தரங்கம் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தலைமையில் நடந்தது.

இதில் பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், அஜீத் நடித்த விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற கண்ணான கண்ணே பாடலில் , பாடலாசிரியர் தாமரை வழக்கொழிந்த தமிழ் சொற்களை மீட்டெடுத்து பயன்படுத்தி இருப்பது பாராட்டுக்குரியது என்றார்.

பொன்னான கையால் நீவவா என்ற வரிகளை பாராட்டிய அமைச்சர் நல்ல கவிஞர்கள் இருப்பது போல நாங்களும் பாடல் எழுதுகிறோம் என்ற பெயரில் பல தமிழ் சொற்களுக்கு பால் ஊற்றும் வேலையையும் சில கவிஞர்கள் செய்கிறார்கள் என மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.

From around the web