அஜித்தின் ‘வலிமை’ அப்டேட்: போனிகபூரின் டுவீட் வைரல்!

 

அஜித் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வந்த திரைப்படம் ‘வலிமை’. இந்த படம் 100 கோடி செலவில் தயாராகி வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது

இந்த நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்து அப்டேட்டை தயாரிப்பாளர் போனி கபூர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.  அஜித் வரும் மே ஒன்றாம் தேதி தனது 50வது பிறந்தநாளை கொண்டாட இருக்கும் நிலையில் அதே தினத்தில் ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று அவர் அறிவித்துள்ளார்

valmai

இதனை அடுத்து அஜித் ரசிகர்கள் இந்த அறிவிப்பை கொண்டாடி வருகின்றனர். ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் அஜித்தின் பிறந்தநாள் என வரும் மே 1ஆம் தேதியை இந்த ஆண்டு மிகவும் சிறப்பாக கொண்டாட அஜித் ரசிகர்கள் திட்டமிட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web