பெற்றோருடன் கோவிலுக்கு சென்ற அஜித்: வைரலாகும் புகைப்படம்!

 

தல அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே 

ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வரும் இந்த படப்பிடிப்பில் அஜித்தும் கலந்து கொண்டிருக்கிறார் என்பதும் அஜித் சம்பந்தப்பட்ட காட்சிகளை முதலில் படமாக்கி விட்டு அவரை பாதுகாப்பாக சென்னைக்கு அனுப்பி வைக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 

valimai

இந்த நிலையில் படப்பிடிப்பின் இடைவெளியில் அஜீத் தனது பெற்றோருடன் பெங்களூரில் உள்ள கோவிலுக்கு சென்று வந்ததாக தெரிகிறது. இது குறித்த புகைப்படம் ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 

அஜித் குறித்து எந்த ஒரு செய்தி வெளிவந்தாலும் அதனை டுவிட்டரில் வைரலாக்கும் அஜித் ரசிகர்கள், அஜித் பெற்றோருடன் கோவிலுக்கு சென்று விட்டு திரும்பி வந்தபோது எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தையும் வைரலாக்கி வருகின்றனர்

இந்த நிலையில் வலிமை படத்திற்கு பின்னர் அஜீத் நடிக்க உள்ள படத்தை சுதா கொங்கரா இயக்க இருப்பதாகவும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் இன்னும் ஒரு சில வாரங்களில் ஆரம்பிக்கும் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளதால் அஜித் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது  

From around the web