இன்னும் 2 நாள்ல்ல ‘வலிமை’ ஸ்டேட்டஸ் வரல்ல… உனக்கு RIP தான்: போனிகபூரை மிரட்டும் அஜித் ரசிகர்கள்

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களாக எந்த திரைப் படங்களின் படப்பிடிப்புகளும் நடைபெறவில்லை. இருப்பினும் அவ்வப்போது திரைப்படங்கள் குறித்த அப்டேட்டுக்கள் வெளிவந்து ரசிகர்களை குஷி ஆக்கி வருகிறது என்பது தெரிந்ததே ஆனால் அஜீத் நடித்து வரும் ’வலிமை’ படத்தின் அப்டேட்கள் இதுவரை எதுவுமே வெளிவரவில்லை. இந்த படத்தின் எந்த தகவலையும் தயாரிப்பாளர் போனிகபூர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் இன்று அவர் தனது டுவிட்டரில் நாளை காலை 9.09
 
இன்னும் 2 நாள்ல்ல ‘வலிமை’ ஸ்டேட்டஸ் வரல்ல… உனக்கு RIP தான்: போனிகபூரை மிரட்டும் அஜித் ரசிகர்கள்

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களாக எந்த திரைப் படங்களின் படப்பிடிப்புகளும் நடைபெறவில்லை. இருப்பினும் அவ்வப்போது திரைப்படங்கள் குறித்த அப்டேட்டுக்கள் வெளிவந்து ரசிகர்களை குஷி ஆக்கி வருகிறது என்பது தெரிந்ததே

ஆனால் அஜீத் நடித்து வரும் ’வலிமை’ படத்தின் அப்டேட்கள் இதுவரை எதுவுமே வெளிவரவில்லை. இந்த படத்தின் எந்த தகவலையும் தயாரிப்பாளர் போனிகபூர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்று அவர் தனது டுவிட்டரில் நாளை காலை 9.09 மணிக்கு ஒரு சர்ப்ரைஸ் செய்தியை சொல்ல போகிறேன் என்று கூறினார். இதனை அடுத்து அஜித் ரசிகர்கள் அனைவரும் ’வலிமை’ படத்தின் தகவலைத்தான் போனிகபூர் சொல்லப்போகிறார் என்று நினைத்தனர்

ஆனால் அஜித் ரசிகர்கள் அதிர்ச்சி அடையும் வகையில் அவர் கொடுக்க இருக்கும் தகவல் ’பிங்க்’ படத்தின் தெலுங்கு ரீமேக் படம் என்று தெரியவந்துள்ளது. பவன் கல்யாண், நிவேதா தாமஸ், அஞ்சலி நடிப்பில் உருவாகவுள்ள பிங்க் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நாளை காலை 9.09 மணிக்கு அவர் வெளியிடப் போவதாக கூறப்படுகிறது

இதனால் அதிர்ச்சி அடைந்த அஜித் ரசிகர்கள் போனி கபூருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இன்னும் இரண்டு நாளில் ’வலிமை’ படத்தின் தகவலை வெளியிடாவிட்டால் RIP தான் என்று மிரட்டி ஒரு ரசிகர் பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

From around the web