உலகம் சுற்றும் அஜித்: வைரல் புகைப்படங்கள்

 
ajith

தல அஜித் ‘வலிமை’ படப்பிடிப்பிற்காக கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரஷ்யா சென்றார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நேற்று முன்தினம் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு ரஷ்யாவில் முடிவடைந்தது. இதனை அடுத்து படக்குழுவினர் அனைவரும் நேற்று சென்னை திரும்பியதாக தகவல் வெளியானது 

ஆனால் அஜித் மட்டும் இன்னும் சென்னை திரும்பவில்லை என்றும் அவர் ரஷ்யாவில் இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. ரஷ்யாவில் இருந்து அவர் உலகம் முழுவதும் பைக்கில் சுற்ற முடிவு செய்து இருப்பதாகவும் இதனை அடுத்து அவர் இதற்கு முன்னர் உலகம் முழுவதும் பைக்கில் சென்றவர்களுடன் ஆலோசனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது 

ஏற்கனவே 10 ஆயிரம் கிலோ மீட்டர் சிக்கிம் வரை பயணம் செய்த அஜீத் தற்போது உலகம் சுற்றும் அஜித் ஆக மாறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த புகைப்படங்களும் வைரலாகி வருகிறது

From around the web