கட்டாயப்படுத்தி மருத்துவர் செய்த காரியம்... காயப்பட்டு நிற்கும் ரைசா!..

மாடலும், நடிகையுமான ரைசா வில்சன் ஃபேஷியல் செய்ய சென்ற இடத்தில் டாக்டர் அவரை கட்டாயப்படுத்தி ஒரு ட்ரீட்மென்ட் கொடுத்ததில் அவரின் முகம் அலங்கோலமாகிவிட்டது. இதை பார்த்த ரசிகர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

 
கட்டாயப்படுத்தி மருத்துவர் செய்த காரியம்... காயப்பட்டு நிற்கும் ரைசா!..

மாடல் அழகியான ரைசா வில்சன் தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 படம் மூலம் நடிகையானார். அந்த படத்தில் அவர் கஜோலின் உதவியாளராக நடித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு ரைசாவின் வாழ்க்கையே மாறிவிட்டது. அவர் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக பியார் பிரேமா காதல் படத்தில் நடித்தார். ரைசா வில்சன் ஹீரோயினாக நடித்த முதல் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து அவர் தொடர்ந்து ஹீரோயினாக நடித்து வருகிறார்.

ரைசா சமூக வலைதளங்களில் ரொம்பவே ஆக்டிவாக இருப்பவர். தன்னுடைய அழகிய புகைப்படங்களை அவ்வப்போது வெளியிடுவார். இந்நிலையில் அவர் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். காரணம் ரைசாவின் முகம் பயங்கரமாக இருக்கிறது.

தன் கண்ணுக்கு கீழ் வீங்கியிருக்கும் அந்த புகைப்படத்தை வெளியிட்டு ரைசா கூறியிருப்பதாவது,

டாக்டர் பைரவி செந்திலின் கிளினிக்கிற்கு ஒரு ஃபேஷியல் செய்து கொள்ள சென்றேன். அவர் என்னை கட்டாயப்படுத்தி ஒரு ட்ரீட்மென்ட் கொடுத்தார். தேவையில்லாத அந்த ட்ரீட்மென்ட்டால் இப்படி ஆகிவிட்டது.

அதன் பிறகு அவர் என்னை சந்திக்கவோ, பேசவோ மறுத்துவிட்டார். அவர் ஊரில் இல்லை என்று ஊழியர்கள் கூறுகிறார்கள் என்றார்கள்.

ரைசாவின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து கூறியிருப்பதாவது,

நீங்கள் ஏன் ரைசா ஃபேஷியல் எல்லாம் செய்து கொண்டு. இயற்கையாகவே அழகாக இருக்கிறீர்கள். இனியும் அந்த டாக்டரிடம் செல்ல வேண்டாம். உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள். உங்களை இப்படி பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது என தெரிவித்துள்ளனர்.

அந்த டாக்டரிடம் சென்று தங்களுக்கும் இது போன்று ஆகிவிட்டதாக பலரும் தெரிவித்துள்ளனர். அந்த மெசேஜுகளை ஸ்கிரீன்ஷாட் எடுத்து ரைசா தன் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளியிட்டுள்ளார்.

கெரியரை பொறுத்த வரை ரைசா கையில் ஆலிஸ், காதலிக்க யாருமில்லை, ஹேஷ்டேக் லவ் ஆகிய படங்கள் இருக்கிறது.

From around the web