‘அறம்’ இயக்குனரின் அடுத்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்

நாயகிக்கு முக்கியத்துவம் தரும் படமான ‘அறம்’ படத்தை இயக்கிய இயக்குனர் கோபி நயினார் மீண்டும் நாயகிக்கு முக்கியத்துவம் தரும் படம் ஒன்றை இயக்க திட்டமிட்டுள்ளார். ‘அறம்’ படத்தில் நயன்தாரா ஹீரோயினியாக நடித்த நிலையில் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளார். நாயகிக்கு முக்கியத்துவம் தரும் படமாக இருந்தாலும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷூக்கு ஜோடியாக ஜெய் நடிக்கவுள்ளார். மேலும் இந்த படத்தில் விஜி சந்திரசேகர், சங்கிலி முருகன், பி.எல்.தேனப்பன், ஆர்.என்.ஆர் மனோகர் உள்பட பலர் நடிக்கிறார்கள். பிரசாத்
 
aiswarya-rajesh

‘அறம்’ இயக்குனரின் அடுத்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்

நாயகிக்கு முக்கியத்துவம் தரும் படமான ‘அறம்’ படத்தை இயக்கிய இயக்குனர் கோபி நயினார் மீண்டும் நாயகிக்கு முக்கியத்துவம் தரும் படம் ஒன்றை இயக்க திட்டமிட்டுள்ளார். ‘அறம்’ படத்தில் நயன்தாரா ஹீரோயினியாக நடித்த நிலையில் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளார்.

நாயகிக்கு முக்கியத்துவம் தரும் படமாக இருந்தாலும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷூக்கு ஜோடியாக ஜெய் நடிக்கவுள்ளார். மேலும் இந்த படத்தில் விஜி சந்திரசேகர், சங்கிலி முருகன், பி.எல்.தேனப்பன், ஆர்.என்.ஆர் மனோகர் உள்பட பலர் நடிக்கிறார்கள். பிரசாத் என்ற புதுமுகம் இசை அமைக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். சினிமா சிட்டி நிறுவனத்தின் சார்பில் கே.கங்காதரன், ஓ.எக்ஸ் புரொடக்சன் சார்பில் எஸ்.பி.விஜய் தயாரிக்கிறார்கள்.

‘அறம்’ இயக்குனரின் அடுத்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்

வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாட்டில் இருந்தும் தமிழகத்திற்கு வந்தவர்கள் தமிழர்களின் அடையாளத்தை அழிக்க செய்யும் முயற்சி மற்றும் தமிழ் கலாச்சாரம் அவர்கள் கையில் என்ன பாடு படுகிறது என்பதை விளக்கும் படம் தான் இந்த படம் என்று கூறப்படுகிறது.

From around the web