ரசிகரிடம் சத்தியம் வாங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ் .. காரணம் இதுதானாம்!!

ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ், தெலுங்கு மலையாள போன்ற தென்னிந்திய மொழிகளில் முன்னணிக் கதாநாயகியாக வலம் வருகிறார். இவர் சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளராக தனது பணியைத் துவக்கினார். அதன்பின்னர் கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்குபெற்ற இவர் நீதானா அவன் என்னும் படத்தின்மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தார். இவர் அட்டகத்தி, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், தர்மதுரை போன்ற படங்களில் இரண்டாவது கதாநாயகியாகவே நடித்து இருப்பார். தன்னுடைய 22 வயதிலேயே காக்கா
 
ரசிகரிடம் சத்தியம் வாங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ் .. காரணம் இதுதானாம்!!

ஐஸ்வர்யா ராஜேஷ்  தமிழ், தெலுங்கு மலையாள போன்ற தென்னிந்திய மொழிகளில் முன்னணிக் கதாநாயகியாக வலம் வருகிறார். இவர் சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு என்ற  நிகழ்ச்சியின் தொகுப்பாளராக தனது பணியைத் துவக்கினார்.

அதன்பின்னர் கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட  நிகழ்ச்சியில் பங்குபெற்ற இவர் நீதானா அவன்  என்னும் படத்தின்மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தார்.

இவர் அட்டகத்தி,  ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், தர்மதுரை போன்ற படங்களில் இரண்டாவது கதாநாயகியாகவே நடித்து இருப்பார். தன்னுடைய 22 வயதிலேயே காக்கா முட்டை படத்தில் 2 குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்து, சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றார்.

ரசிகரிடம் சத்தியம் வாங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ் .. காரணம் இதுதானாம்!!

கனா மற்றும் நம்ம வீட்டுப் பிள்ளை இவருக்கு ஹிட் படங்களாக அமைய, தற்போது ஒரு டஜன் படங்களை கையில் வைத்துள்ளார்.

லாக்டவுனில் வீட்டில் இருந்துவரும் ஐஸ்வர்யா ராஜேஷ் அவ்வப்போது இன்ஸ்டாகிராவில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார், அந்தவகையில் தற்போது ஒரு புகைப்படத்தைப் பதிவிட, இவருடைய ரசிகர் ஒருவர், “திருப்பூரில் இருந்து உங்களுடைய தீவிர ரசிகன் நான் அக்கா. உங்களுக்காக நான் சாகவும் தயார் அக்கா’ என்று பதிவிட்டுள்ளார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளதாவது, “நன்றி. ஆனால் இதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது. வாழ்க்கை என்பது யாருக்காகவும் சாவதற்கான ஒன்று கிடையாது இல்லை. இதுபோன்ற வார்த்தைகளை சொல்ல மாட்டேன் என்று சத்தியம் செய்தால், உங்களுக்கு நண்பராக இருப்பேன்” என்று பதிவிட்டுள்ளார்.

From around the web