’வாவ்’ புதிய காரை பார்த்து ஆச்சரியம் அடைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

 

விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த க/பெ ரணசிங்கம் என்ற திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் ரிலீஸ் ஆனது என்பது தெரிந்ததே. வெளிநாட்டில் வேலை செய்யும் ஒருவர் அங்கேயே இறந்து விட்டால் அவரது பிணத்தை கொண்டு வருவது எந்த அளவுக்கு சிரமம் என்பது குறித்த கதையம்சம் கொண்ட இந்தப் படம் பார்ப்பவர்களின் மனதை உருக்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக வெளிநாட்டில் தங்கள் உறவினர்களை இழந்தவர்களின் துன்பத்தை அப்படியே அவர்கள் கண்முன் நிறுத்தியது

இந்த நிலையில் இந்த படத்தை மிகச்சிறப்பாக இயக்கிய இயக்குனர் விருமாண்டி அவர்களுக்கு தயாரிப்பாளர் கேஜேஆர் ராஜேஷ் அவர்கள் புத்தம் புதிய மாருதி கார் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார் இது குறித்த புகைப்படங்கள் சமீபத்தில் நடந்த சில மணி நேரங்களாக சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

புத்தம் புதிய காருடன் இயக்குனர் விருமாண்டியும் அவரது தாயார் மற்றும் குடும்பத்தினரும் இருக்கும் காட்சி அந்த புகைப்படங்களில் உள்ளது. இந்த நிலையில் இந்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த இந்த படத்தின் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் ’வாவ்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த டுவீட் தற்போது வைரலாகி வருகிறது


 

From around the web