ஹேப்பி அஸ்வின் குளுகுளு.... சோ ஸ்வீட் ஆஃப் யூ!!! ரொமான்சில் ஷிவாங்கி..

அந்த வகையில் தற்போது அஸ்வின் இன்ஸ்டாகிராமில் ஒரு புதிய மைல்கல்லாக அடைந்துள்ளார். 
 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. வரவர பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இணையான ரசிகர் பட்டாளம் இந்த நிகழ்ச்சிக்கும் உருவாகியுள்ளது. போட்டியாளர்கள் கோமாளிகளை வைத்துக் கொண்டு சமைக்க படாதபாடு படும் காட்சிகள் ரசிகர்களை குலுங்கி, குலுங்கி சிரிக்க வைக்கிறது. 

போட்டியாளர்களுக்கும் சரி, கோமாளிகளுக்கும் சரி தனித்தனியே ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்றே சொல்லலாம். அதிலும் முக்கியமாக புகழ், பாலா, ஷிவாங்கி, மணிமேகலை என கடந்த சீசனில் இருந்த கோமாளிகள் இந்த சீசனிலும் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த ஷோவிற்காக ரசிகர்கள் காத்திருந்து பார்க்கும் அளவிற்கு மிகப்பெரிய ரீச் அடைந்துள்ளது.

அதிலும் முக்கியமாக இந்த சீசனை ஷிவாங்கி அஸ்வினுக்காகவே பலரும் பார்க்கின்றனர் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு அஸ்வினுக்காக ஷிவாங்கியும் சுனிதாவும் போட்டி போட்டுக் கொள்ளும் சிறு சிறு சண்டைகளும் வயிற்றை பதம் பார்க்கும் அளவிற்கு சிரிப்பை வரவழைக்கிறது. 

ஏற்கனவே ஷிவாங்கிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். அதிலும் அஸ்வின் ஷிவாங்கி செய்யும் கூடுதல் குறும்புகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அந்த வகையில் தற்போது அஸ்வின் இன்ஸ்டாகிராமில் ஒரு புதிய மைல்கல்லாக அடைந்துள்ளார். 

இன்ஸ்டாகிராமில் அவரது கணக்கு மில்லியன் Follower-களை எட்டியுள்ள நிலையில் அவருக்கு விஜய் டிவி பிரபலங்களும், குக் வித் கோமாளி போட்டியாளர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் ஷிவாங்கி அவருக்கு சர்ப்ரைஸாக "ஹேப்பி ஒன் மில்லியன் குளுகுளு" என்ற வாசகம் அடங்கிய  கேக் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அந்த புகைப்படத்தை பதிவிட்ட அஸ்வின் "சோ ஸ்வீட் ஆஃப் யூ (So sweet of you )மிக்க நன்றி என்று கூறியுள்ளார்.இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

From around the web