பிக்பாஸ் முடிந்தவுடன் கமல்ஹாசனின் புதிய படம் ஆரம்பம்: அப்போ இந்தியன் 2’ என்னாச்சு?

பிக்பாஸ் நிகழ்ச்சி வரும் அக்டோபர் 10ம் தேதி முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இந்த நிகழ்ச்சியை கமலஹாசன் தொடர்ச்சியாக 100 நாள் நடத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படத்தில் நடிக்க உள்ளார்முன்னதாக இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருந்தார் என்பதும் கமலஹாசன் தயாரிக்க இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் ரஜினிகாந்த் இந்த படத்தில் நடிக்க விரும்பவில்லை என்று கூறியதை அடுத்து ரஜினி நடிக்க இருந்த கேரக்டரில்
 

பிக்பாஸ் முடிந்தவுடன் கமல்ஹாசனின் புதிய படம் ஆரம்பம்: அப்போ இந்தியன் 2’ என்னாச்சு?

பிக்பாஸ் நிகழ்ச்சி வரும் அக்டோபர் 10ம் தேதி முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இந்த நிகழ்ச்சியை கமலஹாசன் தொடர்ச்சியாக 100 நாள் நடத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படத்தில் நடிக்க உள்ளார்
முன்னதாக இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருந்தார் என்பதும் கமலஹாசன் தயாரிக்க இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் ரஜினிகாந்த் இந்த படத்தில் நடிக்க விரும்பவில்லை என்று கூறியதை அடுத்து ரஜினி நடிக்க இருந்த கேரக்டரில் கமல்ஹாசனே நடிக்க முடிவு செய்துள்ளார்.

இந்த படத்தின் திரைக்கதையை லோகேஷ் கனகராஜ் எழுத தொடங்கி விட்டார் என்றும், இன்னும் 2 மாதங்களில் திரைக்கதையை அவர் முடித்து விடுவார் என்றும் கூறப்படுகிறது. இதனை அடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்

ஆனால் அதே நேரத்தில் கமலஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் ‘இந்தியன் 2’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்போது என்பது குறித்த எந்தவித தகவலும் இல்லை. அதே போல் ’தலைவன் இருக்கிறான்’ படத்தையும் கமலஹாசன் தொடங்குவதாக இருந்தது. அந்த படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற தகவல் இல்லை என்பது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web