14 வருடங்களுக்கு பின் அஜித் படத்தில் இடம்பெறும் காட்சி!

 

அஜித்தின் சமீபத்திய படங்கள் அனைத்தும் ஆக்சன் படங்களாக இருந்தாலும் அதில் தம்பி, தங்கை மற்றும் மனைவி சென்டிமென்ட் இருக்கும் என்பது தெரிந்ததே

வீரம் படத்தில் தம்பி செண்டிமெண்டும், வேதாளம் படத்தில் தங்கை சென்டிமென்ட்டும், விவேகம் படத்தில் மனைவி செண்டிமெண்டும், விஸ்வாசம் படத்தில் மகள் செண்டிமெண்டும், இருந்தது 

valimai

இந்த நிலையில் 14 வருடங்களுக்குப் பின் அஜித் நடிக்கும் படத்தில் அம்மா சென்டிமென்ட் உள்ளது. அஜித் நடிப்பில் கேஎஸ் ரவிக்குமார் இயக்கிய வரலாறு திரைப்படத்தில் அம்மா சென்டிமென்ட் இருக்கும் என்பது தெரிந்ததே. அந்த வகையில் தற்போது 14 வருடங்கள் கழித்து வலிமை படத்தில் அம்மா சென்டிமென்ட் இருப்பதாகவும் இதில் அஜித்தின் அம்மாவாக பழம்பெரும் நடிகை சுமித்ரா நடித்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன இந்த படம் நிச்சயம் குடும்ப ஆடியன்ஸ்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

வலிமை படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இது ஒரு சர்வதேச போலீஸ் கதை என்றும் இந்த கதை இந்தப் படத்தின் ஆக்ஷன் காட்சிகள் இதுவரை இந்திய திரை உலகில் இல்லாத வகையில் மிகவும் பிரமாண்டமாக இருக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது

From around the web