மழைநீரில் காகித கப்பல் விட்ட நடிகை: 90s குட்டீஸ்களின் சந்தோஷம்!

 
மழைநீரில் காகித கப்பல் விட்ட நடிகை: 90s குட்டீஸ்களின் சந்தோஷம்!

சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர் உள்பட பல தொலைக்காட்சி சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை ரக்சிதா மகாலட்சுமி. இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்பதும் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆயிரக்கணக்கானோர் பாலோ செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் தற்போது சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் மழைநீர் தெருக்களில் ஆறாக ஓடி வருகிறது. கடந்த 90ஆம் ஆண்டுகளில் உள்ள குட்டீஸ்கள் எல்லாம் மழை நேரங்களில் தெருக்களில் மழைநீர் ஓடத் தொடங்கி விட்டால் உடனே காகிதத்தில் கப்பல் செய்து அந்த மழை தண்ணீரில் விட்டு விளையாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது 

ஆனால் தற்போதைய டெக்னாலஜி உலகில் அந்த விளையாட்டு என்னவென்றே இன்றைய தலைமுறைகளுக்கு தெரியாமல் போனது. இந்த நிலையில் ரக்சிதா மகாலட்சுமி இன்று இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோவில் மழைநீரில் காகிதகப்பல் விடும் காட்சிகள் உள்ளன இந்த பதிவில் அவர் நமக்கு இதில் தான் சந்தோஷம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web