செல்லப்பிராணியுடன் இருக்கும் சிங்கப்பெண்...!

தளபதி விஜய் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வெளியாகிய படம் பிகில். இத்திரைப்படத்தில் நடிகை வர்ஷா பொல்லம்மா நடித்திருந்தார். இத்திரைப்படம் ராஜா ராணி ,தெறி திரைப்படங்களின் இயக்குனர் அட்லி இயக்கியிருந்தார். பிகில் திரைப்படத்தில் நடிகை வர்ஷா பொல்லம்மா நடித்திருந்த கதாபாத்திரம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. பிகில் திரைப்படத்தின் மூலம் நடிகை வர்ஷா பொல்லம்மா சிங்கப்பெண் என்று ரசிகர்கள் மத்தியில் அழைக்கப்பட்டார்.

நடிகை வர்ஷா பொல்லம்மா நடிகர் சசிகுமார் நடித்த வெற்றிவேல் திரைப்படத்திலும் நடித்திருந்தார் . மக்கள் செல்வன் என்று அழைக்கப்படும் நடிகர் விஜய் சேதுபதியின் 96 என்ற திரைப்படத்திலும் நடிகை வர்ஷா பொல்லம்மா நடித்திருந்தார்.
இவர் தமிழ் சினிமா மட்டுமின்றி மலையாளம் ,தெலுங்கு சினிமாக்களிலும் பல படங்கள் நடித்துள்ளார். தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் இவர் வெளியிட்டுள்ள போஸ்ட் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாகவும், ஆனந்தமாகவும் அமைந்துள்ளது. அவரது டுவிட்டர் போஸ்ட் வைரலாக பரவுகிறது.
Happy place :’) pic.twitter.com/7WDWI8WyU1
— Varsha Bollamma (@VarshaBollamma) February 5, 2021