கண் பேசும் வார்த்தைகள் புரியவில்லை.....!

வம்சம் ,தொண்டன் போன்ற படங்களில் நடித்துள்ளவர் நடிகை "சுனைனா" இவர் நடிகர் விஜய் நடித்துள்ள தெறி திரைப்படத்திலும் நடித்துள்ளார். மேலும் இவர் நீர்ப்பறவை ,மாசிலாமணி போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகி இருந்த "காதலில் விழுந்தேன்" என்ற திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது.

இந்நிலையில் இவர் நடிப்பில் வெளியாகியுள்ள "ட்ரிப்" திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது. இவர் நடித்துள்ள இப்படத்தில் இவருடன் பிரபல காமெடி நடிகர் "யோகிபாபு" இணைந்து நடித்துள்ளார். யோகி பாபு நடிப்பில் வெளியாகியிருந்த "காக்கா முட்டை" திரைப்படம் அவருக்கு வெற்றியாக அமைந்தது. நடிகை சுனைனா மற்றும் நடிகர் யோகிபாபு நடித்த இத்திரைப்படத்தில் இவர்களுடன் பிரபல காமெடி நடிகர் "கருணாகரன்" இணைந்து நடித்துள்ளார் .இவரது நடிப்பில் வெளியாகியிருந்த "இன்று நேற்று நாளை" என்ற திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது.
இந்நிலையில் "ட்ரிப்" படத்தின் வெளியாகிய மகிழ்ச்சியில் உள்ள நடிகை சுனேனா, தனது ட்விட்டர் பக்கத்தில் தான் இருக்கும் போஸ்டரை போஸ்ட் செய்துள்ளார். இவரது போஸ்டர்கள் ரசிகர்களிடையே வேகமாக பரவி வருகிறது.
Back to work 😇 pic.twitter.com/KmBXvjOwoN
— SUNAINAA (@TheSunainaa) February 6, 2021