சூர்யா-கார்த்திக் நாயகி செய்த சிறப்பான செயல்

ஒருபக்கம் திரையுலகினர் ‘மீ டூ’ பிரச்சனையில் பிசியாக இருந்தாலும் இன்னொரு பக்கம் சில நடிகைகள் உண்மையான சமூக சேவையில் இறங்கியுள்ளனர். அந்த வகையில் சூர்யா நடித்த ‘மாஸ்’, மற்றும் கார்த்தி நடித்த ‘சகுனி’ உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகை ப்ரணிதா, தனது தந்தையின் சொந்த கிராமமாமான ஆலுர் என்ற கிராமத்தில் உள்ள பள்ளி ஒன்றை தத்தெடுத்துள்ளார். பள்ளியை தத்தெடுத்தது மட்டுமின்றி ஓய்வு நேரம் கிடைக்கும்போதெல்லாம் அந்த பள்ளிக்கு சென்று குழந்தைகளுக்கு பாடம் நடத்தி வருகிறார். மேலும்
 

சூர்யா-கார்த்திக் நாயகி செய்த சிறப்பான செயல்

ஒருபக்கம் திரையுலகினர் ‘மீ டூ’ பிரச்சனையில் பிசியாக இருந்தாலும் இன்னொரு பக்கம் சில நடிகைகள் உண்மையான சமூக சேவையில் இறங்கியுள்ளனர். அந்த வகையில் சூர்யா நடித்த ‘மாஸ்’, மற்றும் கார்த்தி நடித்த ‘சகுனி’ உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகை ப்ரணிதா, தனது தந்தையின் சொந்த கிராமமாமான ஆலுர் என்ற கிராமத்தில் உள்ள பள்ளி ஒன்றை தத்தெடுத்துள்ளார்.

பள்ளியை தத்தெடுத்தது மட்டுமின்றி ஓய்வு நேரம் கிடைக்கும்போதெல்லாம் அந்த பள்ளிக்கு சென்று குழந்தைகளுக்கு பாடம் நடத்தி வருகிறார். மேலும் இவருடைய அறிவுரையின்படி இவருடைய நண்பர்களும் ஒருசில பள்ளிகளை தத்தெடுத்து வருகின்றனர். குறிப்பாக பள்ளியை தத்தெடுப்பவர்கள் கழிவறை அமைப்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பதால் மாணவ, மாணவிகள் சிரமம் இன்றி பள்ளிக்கு வருவதாக கூறப்படுகிறது.

ப்ரணிதாவை போலவே ஒவ்வொரு நட்சத்திரங்களும் ஒரு பள்ளியை தத்தெடுத்தால் இந்தியாவில் உள்ள அனைத்து பள்ளிகளும் தரம் வாய்ந்த பள்ளியாக மாறிவிடும் என்பதில் சந்தேகமில்லை

From around the web