ரஜினியின் ‘தர்பார்’ படத்தில் நடித்த நடிகைக்கு கொரோனா பாசிட்டிவ்!

 
ரஜினியின் ‘தர்பார்’ படத்தில் நடித்த நடிகைக்கு கொரோனா பாசிட்டிவ்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகை ஒருவருக்கு கொரோனா பாசிட்டிவ் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

கடந்த சில நாட்களாக திரையுலகினர் பலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக நடிகர் மாதவனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு சமீபத்தில் ஏற்பட்டது

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி ‘தர்பார்’ படத்தில் ரஜினியின் மகளாக நடித்தவர் நிவேதா தாமஸுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனை அடுத்து அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் மருத்துவர்களின் அறிவுரைப்படி சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறியுள்ளார் 

nivetha

இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராமில் கூறியபோது நான் கொரோனா வைரஸ் பாசிட்டிவ் ஆகி உள்ளேன். இருப்பினும் மருத்துவர்களின் அறிவுரைப்படி நான் சிகிச்சை எடுத்து வருகிறேன். எனக்கு மருத்துவர்கள் நல்ல ஒத்துழைப்புடன் சிகிச்சை அளித்து வருகின்றனர் அவர்களுக்கு எனது நன்றி. விரைவில் நான் குணம் ஆகி விடுவேன் என நம்புகிறேன். தயவுசெய்து வீட்டை விட்டு வெளியே செல்லும் பொதுமக்கள் மாஸ்க் அணிந்து பாதுகாப்புடன் சென்று வாருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார் 

நிவேதா தாமஸ்க்ககு கொரோனா வைரஸ் பாதிப்பு என்ற தகவல் வந்தவுடன் அவர் விரைவில் குணமாக வேண்டும் என ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

From around the web