தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நிக்கி கல்ராணி கொரோனாவால் பாதிப்பு என்ற தகவல் கோலிவுட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது ஜிவி பிரகாஷ் நடித்த டார்லிங், ராகவா லாரன்ஸ் நடித்த மொட்டசிவா கெட்டசிவா உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை நிக்கி கல்ராணி. இவர் தற்போது தமிழ் தெலுங்கு திரையுலகில் பிஸியாக இருந்து வரும் நிலையில் திடீரென அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது இது குறித்து தனது டுவிட்டரில் நிக்கி கல்ராணி கூறியபோது கடந்த வாரம் எனக்கு
 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நிக்கி கல்ராணி கொரோனாவால் பாதிப்பு என்ற தகவல் கோலிவுட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

ஜிவி பிரகாஷ் நடித்த டார்லிங், ராகவா லாரன்ஸ் நடித்த மொட்டசிவா கெட்டசிவா உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை நிக்கி கல்ராணி. இவர் தற்போது தமிழ் தெலுங்கு திரையுலகில் பிஸியாக இருந்து வரும் நிலையில் திடீரென அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

இது குறித்து தனது டுவிட்டரில் நிக்கி கல்ராணி கூறியபோது கடந்த வாரம் எனக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். இதனால் நான் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு உள்ளேன்

எனக்கு சுகாதாரத்துறையினர் நல்ல முறையில் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். என்னை நல்லபடியாக கவனித்துக் கொண்டிருக்கும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் எனது நன்றி. தற்போது நான் நலமாக இருக்கிறேன். விரைவில் கொரோனா வைரஸில் இருந்து மீண்டு வருவேன் என்று நம்புகிறேன்’ என்று கூறும் நடிகை நிக்கி கல்ராணி தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்

From around the web