நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி கைது: அதிர்ச்சி தகவல்

போதைப்பொருள் வழக்கில் நடிகை ராகினி திவேதி கைது செய்யப்பட்டதை அடுத்து இன்னொரு பிரபல கன்னட நடிகையும் தமிழ் நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரியுமான சஞ்சனா கல்ராணி இடம் விசாரணை செய்ய போலீசார் திட்டமிட்டனர்.
 

போதைப்பொருள் வழக்கில் நடிகை ராகினி திவேதி கைது செய்யப்பட்டதை அடுத்து இன்னொரு பிரபல கன்னட நடிகையும் தமிழ் நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரியுமான சஞ்சனா கல்ராணி இடம் விசாரணை செய்ய போலீசார் திட்டமிட்டனர். அவருக்கு இது குறித்து சம்மன் அனுப்பியதாகவும் தகவல்கள் வெளிவந்தன 

இந்த நிலையில் இன்று காலை 6 மணி அளவில் சிபிஐ அதிகாரிகள் சஞ்சனா கல்ரானி வீட்டில் திடீரென ரெய்டு செய்தனர். இந்த ரெய்டின் முடிவில் அவர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன போதைப்பொருள் விவகாரத்தில் சஞ்சனா கல்ராணிக்கு தொடர்பு இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர்களுடன் சேர்த்து இந்த வழக்கில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி மேலும் சிலர் இந்த வழக்கில் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் கன்னட திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web