முதல் முதலாக பாஜக கூட்டத்தில் பங்கேற்ற நடிகை நமிதா: பரபரப்பு தகவல் 

 

தமிழகத்தில் உள்ள சில திரை நட்சத்திரங்கள் கடந்த சில வாரங்களாக திடீர் திடீரென பாஜகவில் இணைந்து வருகின்றனர் என்பது குறித்த செய்திகளை பார்த்து வருகிறோம் 

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரபல நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான நடிகை நமீதா பாஜகவில் இணைந்தார் என்பது தெரிந்ததே

ஆனால் அவர் பாஜகவில் இணைந்தாலும் இதுவரை பாஜக நடத்தும் நிகழ்ச்சி எதுவும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது முதல் முதலாக பாஜக பொது நிகழ்ச்சியில் நடிகை நமீதா பங்கேற்ற உள்ளார் 

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சிகள் தான் நமீதா பங்கேற்றார். பாஜகவின் பொது நிகழ்ச்சியில் முதன் முதலாக பங்கேற்றது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என நடிகை நமீதா பேட்டி அளித்துள்ளார். மேலும் முதல்முறையாக பாஜக பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற அவருக்கு பாஜக நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web