நடிகை மைனா பேபியின் க்யூட் பெயர்: ரசிகர்கள் வாழ்த்து!

 

சரவணன் மீனாட்சி உள்பட பல முக்கிய தொலைக்காட்சி சீரியல்களில் நடித்த நடிகை மைனா கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார் என்பதும் அதன் பின்னர் சமீபத்தில் அவருக்கு குழந்தை பிறந்தது என்பதும் தெரிந்ததே 

மைனாவின் ஆண் குழந்தைக்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்த நிலையில் தற்போது அவர் தனது குழந்தைக்கு பெயர் வைத்துள்ளார். துருவன் என்ற பெயரை தனது செல்ல குழந்தைக்கு வைத்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மைனா பதிவு செய்துள்ளர்.

myna

மேலும் குழந்தையுடன் தான் இருக்கும் புகைப்படத்தையும் கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தையும் மைனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்

இந்த இன்ஸ்டாகிராம் புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் மேலும் குழந்தை துருவனுக்கும் நெட்டிசன்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் இந்த புகைப்படங்கள் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது

From around the web