ரூ.80 கோடி சொத்துக்களை திருப்பதி கோவிலுக்கு எழுதி வைத்த நடிகை

ஸ்ரீதர் இயக்கிய ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகிய நடிகை காஞ்சனா அதன் பின்னர் பல முன்னணி நடிகர்களுடன் சுமார் 46 ஆண்டுகளாக நடித்து வருகிறார். சமீபத்தில் கூட ‘அர்ஜூன் ரெட்டி’ படத்தில் பாட்டி வேடத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் தான் சினிமாவில் சம்பாதித்த பணத்தில் தி.நகரில் ஒரு பங்களாவை வாங்கியதாகவும், அந்த சொத்துக்களை தனது உறவினர்கள் அபகரித்து கொண்டதாகவும் கூறிய காஞ்சனா, அந்த சொத்தை மீட்க நீண்ட காலம் சட்டப்போராட்டம் நடத்தினார். பின்னர்
 

 ரூ.80 கோடி சொத்துக்களை திருப்பதி கோவிலுக்கு எழுதி வைத்த நடிகை

ஸ்ரீதர் இயக்கிய ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகிய நடிகை காஞ்சனா அதன் பின்னர் பல முன்னணி நடிகர்களுடன் சுமார் 46 ஆண்டுகளாக நடித்து வருகிறார். சமீபத்தில் கூட ‘அர்ஜூன் ரெட்டி’ படத்தில் பாட்டி வேடத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் தான் சினிமாவில் சம்பாதித்த பணத்தில் தி.நகரில் ஒரு பங்களாவை வாங்கியதாகவும், அந்த சொத்துக்களை தனது உறவினர்கள் அபகரித்து கொண்டதாகவும் கூறிய காஞ்சனா, அந்த சொத்தை மீட்க நீண்ட காலம் சட்டப்போராட்டம் நடத்தினார். பின்னர் ஒருவழியாக காஞ்சனாவுக்கு ஆதரவாக தீர்ப்பு, வர தற்போதைய மதிப்பு ரூ.80 கோடியுள்ள அந்த சொத்தை திருப்பதி வெங்கடாசல பெருமாள் கோவிலுக்கு எழுதி வைத்துவிட்டதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

ரூ.80 கோடி சொத்துக்களை திருப்பதி கோவிலுக்கு எழுதி வைத்த நடிகை

திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்ந்துவிட்ட நடிகை காஞ்சனா தற்போது தங்கையின் ஆதரவில் ஆன்மீக ஈடுபாடுகளில் இருப்பதாகவும் அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

From around the web