நடிகை கெளதமி வீட்டுக்குள் சுவரேறி குதித்த இளைஞரால் பரபரப்பு!

 
நடிகை கெளதமி வீட்டுக்குள் சுவரேறி குதித்த இளைஞரால் பரபரப்பு!

பிரபல நடிகையும் சமூக சேவகியுமன கெளதமி வீட்டில் திடீரென மர்ம நபர் ஒருவர் சுவர் ஏறி குதித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

நடிகை கௌதமி சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள வீட்டில் தனது மகளுடன் வசித்து வருகிறார். முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு கமல்ஹாசனுடன் 13 வருடங்கள் இணைந்து வாழ்ந்த கௌதமி திடீரென அவரிடம் இருந்தும் விலகினார்

gauthami

இந்த நிலையில் மகளுடன் தனியாக வாழ்ந்து கொண்டிருக்கும் கௌதமியின் வீட்டில் மர்ம இளைஞர் ஒருவர் நேற்று திடீரென சுவரேறி குதித்ததாக தெரிகிறது. இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் விரைந்து வந்த போலீசார் அந்த இளைஞரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை செய்தபோது அவரது பெயர் பாண்டியன் என்றும் அவர் பெயிண்டர் வேலை செய்வதாகவும் தெரிய வந்தது 

அவரிடம் போலீசார் மேலும் விசாரித்தபோது அவர் முழு போதையில் இருந்ததாகவும் போதை தெளிந்தவுடன் விசாரணை செய்ய போலீசார் முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது. கெளதமியின் வீட்டில் மர்ம இளைஞர் ஒருவர் சுவரேறி குதித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

From around the web