தமிழ் நடிகையை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த தொழிலதிபர்: அதிர்ச்சித் தகவல்

தமிழ் மற்றும் கன்னட திரையுலகில் ஒரு சில படங்களில் நடித்த 30 வயது நடிகை ஒருவரை பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் மிரட்டி பணம் பறித்ததாகவும் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது பெங்களூரை சேர்ந்த நிறுவனத்தின் சிஇஓ என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஒருவர் தன்னிடம் அவரது கம்பெனியின் பிராண்ட் அம்பாசிடராக வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக நடிகை தனது புகாரில் தெரிவித்துள்ளார் மேலும் கடந்த 2019ஆம் ஆண்டு
 
தமிழ் நடிகையை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த தொழிலதிபர்: அதிர்ச்சித் தகவல்

தமிழ் மற்றும் கன்னட திரையுலகில் ஒரு சில படங்களில் நடித்த 30 வயது நடிகை ஒருவரை பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் மிரட்டி பணம் பறித்ததாகவும் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பெங்களூரை சேர்ந்த நிறுவனத்தின் சிஇஓ என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஒருவர் தன்னிடம் அவரது கம்பெனியின் பிராண்ட் அம்பாசிடராக வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக நடிகை தனது புகாரில் தெரிவித்துள்ளார்

மேலும் கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் 22ஆம் தேதி தன்னை அவருடைய பிறந்த நாள் பார்ட்டிக்காக அழைத்ததாகவும் அந்த பார்ட்டியில் கலந்துகொண்ட தனக்கும் மதுவகைகளை குடிக்கக் கொடுத்து அதன் பின்னர் தன்னை தவறாக பயன்படுத்திக் கொண்டதாகவும் அப்போது அவர் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வைத்து தன்னிடம் மிரட்டி பணம் பறித்ததாக கூறியுள்ளார்

இதுவரை தன்னிடம் ரூபாய் 20 லட்சம் வரை பணம் பறித்து உள்ளதாகவும் இதுகுறித்து அவரது பெற்றோர்களிடம் முறையிட்ட போது அவர்கள் தங்கள் மகனுக்கு சாதகமாக பேசியதாகவும் இதனை அடுத்து வேறு வழியில்லாமல் தற்போது காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளதாகவும் அந்த நடிகை தெரிவித்துள்ளார் இதுகுறித்து காவல் நிலைய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

From around the web