நடிகை அஞ்சலியின் இரட்டை பிறவியா? அசர வைக்கும் புகைப்படங்கள்!

காதல் கண் கட்டுதே’ என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை அதுல்யா ரவி அதன் பின்னரே ’சுட்டு பிடிக்க உத்தரவு’ ’நாடோடிகள் 2’ உள்பட ஒருசில படங்களில் நடித்தார். அவர் தற்போது ’வட்டம்’, ’முருங்கைக்காய் சூப்’ மற்றும் ’என் பெயர் ஆனந்தன்’ உட்பட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் அதுல்யாவை திரையில் பார்க்கும் பலர் அஞ்சலி போலவே இருப்பதாக கூறி வந்தனர் அஞ்சலியின் இரட்டைப் பிறவியா என்று ஆச்சர்யப்படும் அளவிற்கு அவர்கள் இருவருடைய உருவங்கள் ஒரே மாதிரி இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் நடிகை அஞ்சலி தனது சமூக வலைதளப் பக்கத்தில் அதுல்யாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதுல்யா, அஞ்சலிக்கு முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படமும் இருவரும் தோழமையுடன் இருக்கும் புகைப்படங்களும் அதில் பதிவு செய்யப்பட்டுள்ளன
இந்த பதிவை பார்த்ததும் அஞ்சலியின் இரட்டைப் பிறவி நேரில் வந்து போலிருக்கிறது என்று கமென்ட் பகுதியில் ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். நடிப்பிலும் அஞ்சலியை மிஞ்சும் அளவிற்கு அதுல்யா ரவி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது