நடிகை அமலாபாலின் நிச்சயதார்த்தம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

 
நடிகை அமலாபாலின் நிச்சயதார்த்தம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான அமலாபால், இயக்குனர் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர் என்பதும் விஜய்க்கு வேறு பெண்ணுடன் திருமணம் நடந்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கடந்த ஆண்டு மும்பையைச் சேர்ந்த பாடகர் பவ்னிந்தர் சிங் என்பவருடன் அமலாபாலுக்கு திருமணம் ஆகிவிட்டதாக சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் பகிரப்பட்டது. இந்த புகைப்படங்களை பவ்னிந்தர் சிங்கே பகிர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது 

amala

ஆனால் இதனை மறுத்த அமலா பால் தனக்கு திருமணம் ஆகவில்லை என்றும் தன்னுடன் எடுத்த புகைப்படங்களை பவ்னிந்தர் சிங் சமூக வலைதளத்தில் வெளியிட தடை விதிக்க கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார் 

இந்த வழக்கின் விசாரணை கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் சற்று முன்னர் இந்த வழக்கில் உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. நடிகை அமலாபால் நிச்சயதார்த்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பவ்னிந்தர் சிங் வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது

From around the web