தன்னம்பிக்கையை பற்றி கூறும் நடிகர் விவேக்...!

காலையிலேயே தன்னம்பிக்கை பற்றி கூறும் நடிகர் விவேக்கின் டுவிட்டர்  போஸ்டர்....,
 
அறிவுரை கூறும் நடிகர் விவேக்கின் டுவிட்டர் போஸ்டர்...

தமிழ் சினிமாவின் நீங்காத நட்சத்திரம் காமெடி நடிகர் விவேக். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் சிவாஜி என்ற திரைப்படத்தில் காமெடியனாக நடித்து இருந்தார். மேலும் இவர் நடிகர் தனுஷுடன் வேலையில்லா பட்டதாரி ,மாப்பிள்ளை போன்ற திரைப்படங்களிலும் நடித்து இருந்தார். இவர் தளபதி விஜய்யுடன் பத்ரி, குஷி போன்ற திரைப்படங்களிலும் நடித்து இருந்தார். 

actor vivek

மேலும் நடிகர் அஜித்துடன் என்னை அறிந்தால் என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார். நடிகர் விக்ரமுடன் அந்நியன் என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார். இவர் நடிகர் சூர்யாவுடன் சிங்கம் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.தற்போது நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள போஸ்ட் ரசிகர்களிடையே வேகமாக பரவி வருகிறது.

"உன் மீது உனக்கே நம்பிக்கை இல்லை என்றால்.. கடவுளே நேரில் வந்தாலும் பயனில்லை.." என்ற விவேகானந்தர் கூறிய வாக்கியங்களின் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டரை காணும் ரசிகர்களின் மனதில் ஒருவித தன்னம்பிக்கை தோன்றுகிறது.

From around the web