நல்ல பண்புகளை விதைக்க கூடிய நபர் நடிகர் விவேக்! பாடகர் அந்தோணி தாஸ்!

சின்ன கலைவாணர் மறைவு ஒட்டுமொத்த உலகில் வாழும் தமிழர்களுக்கு இழப்பு, நேரில் வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தி செய்தியாளரிடம் சில தகவல்களையும் கூறினார்  பாடகர் அந்தோணி தாஸ்
 
நல்ல பண்புகளை விதைக்க கூடிய நபர் நடிகர் விவேக்! பாடகர் அந்தோணி தாஸ்!

ரசிகர்களுக்கு காமெடியை கொடுத்தால் போதும் என்று காமெடி நடிகர்களும் தற்போது உள்ள ஹீரோக்களும்  நினைத்து உள்ள இந்த காலத்திலும் ரசிகர்களுக்கு காமெடி மட்டும் போதாது கருத்துக்களையும் கொடுக்க வேண்டும் என்று தன் வாழ்நாளில் நடித்த படங்கள் அனைத்திலும் காமெடிகளில் பல்வேறு கருத்துகளையும்  வைத்து நடித்திருந்தார் சின்ன கலைவாணர் நடிகர் விவேக். மேலும் இவர் சிறியவர் பெரியவர் இன்றி அனைத்து நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்க விஷயம் தான். மேலும் இவர் பல புதுமுக இயக்குனர்  இயக்கத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்க விஷயம் தான்.

vivek

மேலும் இவர் சுற்றுச்சூழல் ஆர்வலர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய சிறப்பு பெற்ற நடிகர் விவேக் மரணமடைந்து மக்களை சோகத்தில் தள்ளினார். அதன்படி நேற்றைய தினம் அவர் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது மிகுந்த சோகத்தை அளிக்கிறது. மேலும் அவரின் உடலுக்கு பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்துகின்றனர். சினிமாத்துறையினர் மட்டுமின்றி அரசியல் தலைவர்கள் நேரில் வந்து அவருக்கு அஞ்சலி செலுத்துகின்றனர்.

மேலும் கவிஞர் வைரமுத்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் பல இயக்குனர்களும் நடிகர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். தற்போது கானா பாடகர் அந்தோணி தாஸ் நேரில் வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தி செய்தியாளரிடம் சில தகவல்களையும் கூறினார். அதன்படி நடிகர் விவேக் சமூகப் பண்புகளை நல்ல பண்புகளை விதைக்கக் கூடிய நபர் என்றும் அவர் கூறினார். மேலும் சின்ன கலைவாணர் விவேக்கின் மறைவு உலகில் வாழும் ஒட்டுமொத்த தமிழர்களுக்கு பெரும் இழப்பாக உள்ளது என்றும் அவர் கூறினார்.

From around the web