சக காமெடி நடிகரை உயர்த்தி விடும் ஒரு நபர் நடிகர் விவேக் !அஞ்சலி செலுத்திய யோகிபாபு!

விவேக்கின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி பின்னர் செயலாளர் சந்தித்துக் கூறினார் நடிகர் யோகிபாபு!
 
சக காமெடி நடிகரை உயர்த்தி விடும் ஒரு நபர் நடிகர் விவேக் !அஞ்சலி செலுத்திய யோகிபாபு!

திரைப்படம் ஒன்று எடுத்துக் கொண்டால் அதில் ஹீரோ, ஹீரோயின் மட்டுமின்றி மிகப்பெரிய முக்கியமான இடத்தை பிடித்து இருப்பார்கள் காமெடி கதாபாத்திரங்கள். மேலும் ஒவ்வொரு திரைப்படத்தின் வெற்றிக்கு காமெடி மிகப்பெரிய பக்கபலமாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்க விஷயம் தான். தனது நடிப்பாலும் தனது காமெடியிலும் தனது பஞ்ச் டயலாக் இன்று மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளனர் நடிகர் விவேக். மேலும் இவரின் ஒவ்வொரு காமெடியிலும் ஏதாவது ஒரு கருத்து இருக்க தான் செய்யும்.

vivek

இந்நிலையில் அவர் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆக இருந்தார் என்பதும் தவிர்க்க முடியாத உண்மையாக உள்ளது. நேற்றைய தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சினிமா துறையினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மேலும் இவரின் உடலுக்கு ரசிகர்கள் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.மேலும் இவரின் உடலுக்கு அவருடன் பணியாற்றிய சக நடிகர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .

மேலும் இயக்குனர்கள் பலரும் இவருக்கு அஞ்சலி செலுத்தினர். மேலும் தற்போது காமெடி நடிகர் யோகிபாபு நடிகர் விவேக்கின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அதன்படி அவர் கூறினார் நாம் இருவரும் சேர்ந்து நடிப்பதற்காக கதை கேட்டுக் கொண்டிருப்பதாக நடிகர் விவேக் கூறினார் என்றும் அவர் கூறினார். மேலும் தான் போற போக்கில் மரங்களை நட்டு வைக்கவும் அவர் கூறினார். மேலும் அவர் சக காமெடி நடிகரை உயர்த்திடும் ஒரு நபர் விவேக் என்றும் காமெடி நடிகர் யோகிபாபு பேட்டி அளித்தார்.

From around the web