தடுப்பூசி போட்டுக்கொண்டால் உயிரிழப்பை தவிர்க்கலாம் நடிகர் விவேக்!

மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று கூறுகிறார் பிரபல காமெடி நடிகர் விவேக்!
 
தடுப்பூசி போட்டுக்கொண்டால் உயிரிழப்பை தவிர்க்கலாம் நடிகர் விவேக்!

தனது நடிப்பாலும் தனது திறமையாலும் தனது விடா முயற்சியாலும் இன்று மக்கள் மனதில் நல்லதொரு இடத்தைப் பிடித்துள்ளார் நடிகர் விவேக். ரஜினி தொடங்கி தல தளபதி வழியாக தற்போதுள்ள தனுஷ் வரைக்கும் பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் நடிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த சிவாஜி என்ற திரைப்படம் இன்றளவும் மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்று மகிழ்ச்சியான திரைப்படமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் திரைப்படத்தின் வெற்றிக்கு இவரது நகைச்சுவையும் தான் காரணம் என்பதும் தவிர்க்க முடியாத உண்மைதான்.

covaxin

மேலும் இவர் நடிகர் விஜயுடன் குஷி என்ற திரைப்படத்திலும் பத்ரி என்ற திரைப் படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தல அஜித்துடன் இவர் என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகர் தனுஷுடன் இவர் படிக்காதவன், மாப்பிள்ளை, சீடன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

தற்போது கண்ணுக்குத் தெரியாது, மனிதர்களை தாக்கும்கொரோனா  எதிராக தடுப்பூசி போட்டுக்கொண்டார். போட்டுக் கொண்டபின் அவர் சில தகவல்களை கூறினார். அதன்படி கொரோனா தடுப்பூசி தான் மக்களை உயிரை பாதுகாக்கும் தடுப்பு நடவடிக்கை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் உயிர் இழப்பை தடுக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார். இவர் சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டபின் செய்தியாளர்கள் மத்தியில் பேட்டியளித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web