நாளை வருகிறார் "நடிகர் விஷால்"!

"நடிகர் விஷால்" நடிப்பில் உருவாகியுள்ள "சக்ரா" திரைப்படம் நாளை வெளியாக உள்ளது!
 
"விஷால் பிலிம் பேக்டரி" ட்விட்டர் பக்கத்தில் காணப்படும் "சக்ரா" படத்தினை குறித்த தகவல்!

தனது நடிப்பாலும், தனது திறமையாலும் இன்று மிகப்பெரிய நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் "நடிகர் விஷால்". நடிகர் விஷால் "திமிரு", "சண்டக்கோழி" போன்ற பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகி மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் வரவேற்பு பெற்ற பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் "தாமிரபரணி". இத்திரைப்படத்தில் இவருடன் "நடிகர் பிரபு" நடித்திருப்பார்‌.

chakra

மேலும் நடிகர் விஷால் நடிப்பில் வெளியாகி நல்லதொரு வரவேற்பை பெற்று மக்களிடையே இன்றும் பேசப்பட்டு வரும் திரைப்படம் "அவன் இவன்". இத்திரைப்படத்தில் "நடிகர் ஆர்யா" நடிகர் விஷாலுடன் இணைந்து நடித்திருப்பார். இவர்கள் இருவரும் இத்திரைப்படத்தில் "அண்ணன் தம்பியாக" நடித்து இருந்தார்கள். திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.மேலும் இவரது நடிப்பில் வெளியாகிய "ஆம்பள" என்ற திரைப்படம் மக்களுக்கு சிரிப்பு மழையையும், நல்லதொரு குடும்பம் படமாகவும் அமைந்தது. இத்திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக "நடிகை ஹன்சிகா"  நடித்திருப்பார். மேலும் இப்படத்தில் "நடிகை ரம்யா கிருஷ்ணன்"," நடிகர் சதீஷ்"," நடிகர் பிரபு" மற்றும் பல பிரபலங்கள் நடித்திருப்பார்கள்.

தற்போது நடிகர் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள "சக்ரா" திரைப்படம் நாளை வெளியாகும் என "விஷால் பிலிம் பேக்டரி"தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. இதனை கண்ட நடிகர் விஷாலின் ரசிகர்கள் மிகுந்த ஆனந்தத்தில் உள்ளனர் .இத்திரைப்படத்தில் நடிகர் விஷாலுடன்  "விக்ரம்வேதா" திரைப்படத்தின் கதாநாயகியான "சாரதா ஸ்ரீநாத்" நடித்துள்ளார். மேலும் இத்திரைப்படத்தில் பிரபல காமெடி நடிகர் ரோபோ சங்கரும் நடித்துள்ளார்.இத்திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் "யுவன் சங்கர் ராஜா" இசையமைத்துள்ளார். இவர்கள் கூட்டணியில் உருவாகியுள்ள இத்திரைப்படம் நாளை வெளியாகும் என அறிவித்த நிலையில் நடிகர் விஷாலின் ரசிகர்கள் மிகுந்த ஆனந்தத்திலும், கொண்டாட்டத்திலும், மகிழ்ச்சியிலும் உள்ளனர்.

From around the web