மாவட்ட செயலாளர்களுடன் நடிகர் விஜய் ஆலோசனை: அரசியல் கட்சி அறிவிப்பா?

 

நடிகர் விஜய் பெயரில் திடீரென அவரது தந்தை அரசியல் கட்சி ஆரம்பித்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது விஜய் எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் அவர்கள் திடீரென விஜய்யின் பெயரில் அரசியல் கட்சி ஆரம்பித்து உள்ளதாக அறிவித்தார். ஆனால் இந்த அறிவிப்புக்கு மறுப்பு தெரிவித்த விஜய், தனக்கும் அந்த கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், தனது ரசிகர்கள் யாரும் அந்த கட்சியில் சேர வேண்டாம் என்றும் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்தார். இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது 

vijy sac

இந்த நிலையில் ஒரு பக்கம் அரசியல் கட்சி குறித்த பணிகளை எஸ்ஏசி செய்து கொண்டிருக்கும் போது இன்னொரு பக்கம் இன்று மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து விஜய் ஆலோசனை செய்கிறார். 30 மாவட்ட நிர்வாகிகளிடம் விஜய் இன்று ஆலோசனை செய்வததாகவும், இந்த ஆலோசனைக்குப் பின்னர் முக்கிய அறிவிப்பு ஒன்றை அவர் அறிவிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது 

எஸ்.ஏ.சியை சமாளிப்பதற்காக விஜய் அரசியல் களத்தில் குதிப்பாரா? அல்லது அரசியல் நிலைப்பாடு குறித்து ஒரு அறிக்கை விடுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

From around the web