சுஷாந்த் சிங் ராஜ்புத்தை தொடர்ந்து தோனி பட நடிகர் திடீர் தற்கொலை!

சந்தீப் நஹார், மும்பை கொரேகானில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்
 

இந்திய கிரிக்கெட் அணி கேப்டனாக திகழ்ந்த எம்.எஸ், தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் தோனியாக நடித்த  சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் உள்ள அவரது வீட்டில் கடந்தவருடம் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இந்தியாவையே உலுக்கியது.

பின்னர் அவரது மரணம் தூண்டப்பட்ட ஒன்றா என்கிற கோணத்தில் அவரது காதலியும் நடிகையுமான  ரியா சக்ரபோர்த்தி உட்பட பலரும் விசாரிக்கப்பட்டனர். அந்த வழக்கு பாலிவுட்டில் நிலவும் நெப்போட்டிசம் மற்றும் போதைக் கலாச்சாரத்தை தூர்வாரியது.

இந்த நிலையில் அதே படத்தில் நடித்திருந்த மற்றொரு நடிகரான சந்தீப் நஹார், மும்பை கொரேகானில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிரவைத்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தற்கொலைக்கு முன்னர் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் பதிவிட்டிருந்த போஸ்ட்டில் தன் மனைவி மற்றும் மாமியார் தன்னை தொடர்ந்து டார்ச்சர் செய்து மிரட்டியதாகவும்,  மனைவி எப்பொழுதும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதே சமயம் தன் முடிவுக்கு யாரும் பொறுப்பு இல்லை என்றும் இதற்கு முன்பும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று தோன்றியதாகவும், ஆனால் திருமண வாழ்க்கையில் மாற்றம் நடக்கும் என நம்பி இருந்ததாகவும், இப்போது இந்த வாழ்க்கை நரகமாக இருப்பதால் வாழ்வை முடித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். 

பாலிவுட்டில் நடக்கும் பாலிடிக்ஸால், தான் அதிருப்தி அடைந்ததாகவும், கடைசி நேரத்தில் வாய்ப்புகள் பறிபோவதாகவும் அவர் அந்த போஸ்டில் தெரிவித்துள்ளார்.

From around the web