வெகு விமர்சியாக நடந்த நடிகர் வீட்டு திருவிழா...

விஜய் சேதுபதியின் 'தர்மதுரை' படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் ஆர்.கே.சுரேஷ். பின்பு இயக்குனர் பாலாவின் 'தாரை தப்பட்டை' படத்தில் வில்லனாக அறிமுகமானார்' 

 

தொடர்ந்து நம்ம வீட்டு பிள்ளை, பில்லா பாண்டி, ஸ்கெட்ச் போன்ற படங்களில் நடித்தார். இந்நிலையில் அவருக்கும் சினிமா பைனான்சியர் மது என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது. குடும்பத்தினர் மட்டுமே இந்த விழாவில் கலந்துகொண்டனர்.

அதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் பின்பு அவர் பதிவிட்டிருந்தார். ஆவர் கூறும்போது "மிகவும் மகிழ்ச்சியுடன் இந்த விஷயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ஆமாம் எனக்கு திருமணம் நடந்துள்ளது.  உங்களது அன்பு மற்றும் ஆசிர்வாதங்களுக்காக நன்றி" என்று கூறியிருந்தார். ஊரடங்கு முடிந்த உடனேயே சிம்பிளாக அவர்களது திருமணம் நடந்துமுடிந்தது. 

இந்நிலையில் அவரது மனைவி தற்போது கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் பல பிரபலங்களை அழைத்து தனது மனைவிக்கு வெகு விமர்சையாக வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். நடிகர் ஆர்கே சுரேஷ் இல்ல விழாவில் இயக்குனர் பாக்யராஜ், சூரி, பிக் பாஸ் ஆர்த்தி போன்ற பல பிரபலங்கள் பங்கெடுத்துள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. இந்நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

From around the web