எப்பவுமே உங்க பாட்டுத்தான்: எஸ்பிபி குறித்து தனது பாணியில் டுவிட் செய்த சூரி

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் விரைவில் குணமாக வேண்டுமென்று ஒட்டுமொத்த திரையுலகமே பிரார்த்தனை செய்து வருகின்றது இந்த நிலையில் காமெடி நடிகர் சூரி தனது களங்கமில்லா பாணியில் தனது டுவிட்டர் பக்கத்தில் எஸ்பிபி குறித்த ஒரு டுவிட்டை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: எஸ்பிபி சார், விவரம் தெரிஞ்சு, உங்க குரல கேக்காம நாங்க ஒரு நாளக்கூட
 

எப்பவுமே உங்க பாட்டுத்தான்: எஸ்பிபி குறித்து தனது பாணியில் டுவிட் செய்த சூரி

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் விரைவில் குணமாக வேண்டுமென்று ஒட்டுமொத்த திரையுலகமே பிரார்த்தனை செய்து வருகின்றது

இந்த நிலையில் காமெடி நடிகர் சூரி தனது களங்கமில்லா பாணியில் தனது டுவிட்டர் பக்கத்தில் எஸ்பிபி குறித்த ஒரு டுவிட்டை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

எஸ்பிபி சார்,

விவரம் தெரிஞ்சு, உங்க குரல கேக்காம நாங்க ஒரு நாளக்கூட கடந்ததில்லை!!

விடியக்கால நடந்தாலும் சரி,
வீட்ல விசேஷம்னாலும் சரி,

தாலாட்டி எங்கள தூங்க வைக்கறதும் சரி,

தன்னம்பிக்கையா தட்டிக்குடுத்து ஓட வைக்கிறதும் சரி,

எப்பவுமே உங்க பாட்டுத்தான்!!!

எப்பவும் போல இதே சிரிச்ச முகத்தோட நீங்க திரும்ப வந்து எங்களுக்காக பாடனும், உங்க குரல கேட்டுக்கிட்டே எங்க மீதி வாழ்க்க ஓடனும்ன்னு

ஆத்தா மதுரை மீனாட்சிய மனசார வேண்டிக்கிறேன்..சார்.

இவ்வாறு சூரி தெரிவித்துள்ளார்.

From around the web