பிரதமர் மோடியை கடுமையாக எதிர்த்த சித்தார்த்

பிரதமர் மோடி, புல்வாமா தாக்குதலை அரசியலாக்குவதையும், உண்மையான ஹீரோக்களுக்கு முன் நின்றுகொண்டு, ஹீரோ போல நடிப்பதையும் நிறுத்த வேண்டும் என்று நடிகர் சித்தார்த் டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். பாகிஸ்தானுக்குள் புகுந்து இந்தியா பயங்கரவாதிகளை அழித்தது குறித்து ஒவ்வொரு மேடையிலும் பிரதமர் மோடி தவறாமல் பேசிவருகிறார். அந்தவகையில், எல்லை தாண்டியும், இந்தியாவுக்குள்ளும் நமது பாதுகாப்பு படையினர், எதிரிகளை எதிர்த்து சண்டையிட்டுக் கொண்டிருக்கிற நேரத்தில், பாகிஸ்தானை மகிழ்விப்பதற்காக எதிர்க்கட்சிகள் கருத்துகளை வெளியிடுவதாக குற்றஞ்சாட்டி இருந்தார். மேலும் “இயற்கையாகவே நம்முடைய ராணுவ
 

பிரதமர் மோடி, புல்வாமா தாக்குதலை அரசியலாக்குவதையும், உண்மையான ஹீரோக்களுக்கு முன் நின்றுகொண்டு, ஹீரோ போல நடிப்பதையும் நிறுத்த வேண்டும் என்று நடிகர் சித்தார்த் டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடியை கடுமையாக எதிர்த்த சித்தார்த்

பாகிஸ்தானுக்குள் புகுந்து இந்தியா பயங்கரவாதிகளை அழித்தது குறித்து ஒவ்வொரு மேடையிலும் பிரதமர் மோடி தவறாமல் பேசிவருகிறார். 

அந்தவகையில், எல்லை தாண்டியும், இந்தியாவுக்குள்ளும் நமது பாதுகாப்பு படையினர், எதிரிகளை எதிர்த்து சண்டையிட்டுக் கொண்டிருக்கிற நேரத்தில், பாகிஸ்தானை மகிழ்விப்பதற்காக எதிர்க்கட்சிகள் கருத்துகளை வெளியிடுவதாக குற்றஞ்சாட்டி இருந்தார்.

மேலும் “இயற்கையாகவே நம்முடைய ராணுவ படைகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும், பெருமை கொள்ள வேண்டும். ஆனால் சிலர் இந்தியப் படைகளை கேள்வி கேட்க விரும்புகிறார்கள், அது ஏன் என்று தெரியவில்லை,” என பிரதமர் மோடி ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் கருத்து பதிவிட்டுள்ள நடிகர் சித்தார்த், பிரதமர் மோடிக்கு எதிராக கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

அதில் பாதுகாப்புப் படையைதான் மக்கள் நம்புகிறார்கள், உங்களை இல்லை என கருத்து தெரிவித்துள்ள சித்தார்த், இந்திய மக்கள் பாதுகாப்புப் படையினர் மீது நம்பிக்கை கொண்டு, அவர்களுக்கு பக்கபலமாக நிற்கிறார்கள். உங்களையும், உங்களுடைய கூட்டத்தையும்தான் அவர்கள் நம்பவில்லை.

புல்வாமா தாக்குதலை அரசியலாக்குவதை நிறுத்துங்கள். உண்மையான ஹீரோக்களுக்கு முன் நின்றுகொண்டு, ஹீரோ போல நடிப்பதை நிறுத்துங்கள். பாதுகாப்புப் படையினருக்கு நீங்கள் மரியாதை கொடுங்கள். நீங்கள் ராணுவ வீரர் கிடையாது. அவ்வாறு உங்களை நடத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பதை நிறுத்துங்கள். ஜெய் ஹிந்த்’’ இவ்வாறு தனது பதிவில் நடிகர் சித்தார்த் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடியின் பேச்சுக்கு பதில் தெரிவிக்கும் வகையில் சித்தார்த் டிவிட்டரில் தெரிவித்துள்ள கருத்து பாரதீய ஜனதா கட்சியினரை கடும் கோபம் கொள்ள செய்துள்ளது.

40 ராணுவ வீரர்கள் மீது புல்வாமாவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிரதமர் தான் பொறுப்பேற்க வேண்டும் என்றவர்கள், தற்போது இந்தியா திருப்பி தாக்கியது குறித்து பிரதமர் மோடி பேசக்கூடாது என்று கூறுவது எந்த வகையிலான நியாயம் ? என்று கேட்டு சித்தார்த்துக்கு எதிராக டிவிட்டரில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

From around the web