டான் படத்தில் இணையும் நடிகர் சமுத்திரக்கனி...!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கயிருக்கும் டான் திரைப்படத்தில் குணசித்திர நடிகர் சமுத்திரகனி இணைந்துள்ளார்....,
 
நடிகர் சமுத்திரக்கனி  டான் படத்தில்  இணைந்தார் என்று லைகா புரோடக்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக  அறிவித்துள்ளது...,

 லைகா புரோடக்சன் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன் இணைந்து தயாரிக்க உள்ள படம் டான் இத்திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க உள்ளார்.  இத்திரைப்படம் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது . இப்படத்தினை குறித்த தகவல்கள் ரசிகர்களிடையே மிகுந்த ஆச்சரியத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

samuthirakani

இத்திரைப்படத்தில் கதாநாயகியாக இளம் நடிகை பிரியங்கா மோகன் நடிக்கவுள்ளார் .  இத்திரைப்படத்தினை சிபி சக்கரவர்த்தி இயக்கவுள்ளார் இத்திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளரும் குறிப்பாக "மாஸ்டர்" திரைப்படத்தின் இசையமைப்பாளர் ஆகிய "அனிருத்" இசையமைக்கவுள்ளார்.

 மேலும் இத்திரைப்படத்தில் பிரபல குணசித்திர நடிகரும் ,அப்பா ,சாட்டை போன்ற படத்தின்  கதாநாயகனுமான நடிகர் சமுத்திரக்கனி இணைந்துள்ளார்.இவர் இணைந்துள்ளது படத்திற்கு கூடுதல் பலமாக அமையும் என்று ரசிகர்களிடையே எதிர்பார்க்கப்படுகிறது. நடிக்க சமுத்திரக்கனி இணைந்துள்ள தகவல் லைக்கா புரோடக்சன் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

From around the web