வெள்ளிவிழா நாயகன் மோகன் பிறந்த நாள் இன்று

நெஞ்சத்தை கிள்ளாதே மூலம் அறிமுகமானவர் நடிகர் மோகன். எல்லா படங்களிலும் மைக் வைத்து இசைக்கச்சேரிகளில் பாடியதாலும். பெரும்பான்மையான படங்களில் இசைக்கலைஞராக நடித்ததாலும் மைக் மோகன் என்று அழைக்கப்பட்டார். மற்றொரு பெயராக வெள்ளிவிழா நாயகன் மோகன் என்ற பெயரே இவருக்கு நீடித்து நிலைத்து வருகிறது. அழகிய தோற்றமுடைய மோகன் அந்நாளைய பெண்களின் ஆதர்ஷ நாயகன் ஆவார். 30 வருடத்துக்கு முன் மோகன் நடித்த அனைத்து படங்களும் ஹிட் ஆகி அதிசயத்தை ஏற்படுத்தியது.இளையராஜா, ரங்கராஜ், ஆர்.சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் மோகனின் வெற்றிக்கு
 

நெஞ்சத்தை கிள்ளாதே மூலம் அறிமுகமானவர் நடிகர் மோகன். எல்லா படங்களிலும் மைக் வைத்து இசைக்கச்சேரிகளில் பாடியதாலும். பெரும்பான்மையான படங்களில் இசைக்கலைஞராக நடித்ததாலும் மைக் மோகன் என்று அழைக்கப்பட்டார்.

வெள்ளிவிழா நாயகன் மோகன் பிறந்த நாள் இன்று

மற்றொரு பெயராக வெள்ளிவிழா நாயகன் மோகன் என்ற பெயரே இவருக்கு நீடித்து நிலைத்து வருகிறது.

அழகிய தோற்றமுடைய மோகன் அந்நாளைய பெண்களின் ஆதர்ஷ நாயகன் ஆவார். 30 வருடத்துக்கு முன் மோகன் நடித்த அனைத்து படங்களும் ஹிட் ஆகி அதிசயத்தை ஏற்படுத்தியது.இளையராஜா, ரங்கராஜ், ஆர்.சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் மோகனின் வெற்றிக்கு முக்கிய காரணமான நபர்கள்

மோகன் பெரும்பாலும் நடித்த படங்களில் உருவம், பாசப்பறவைகள், உள்ளிட்ட ஒரு சில படங்களை தவிர பெரும்பான்மையான படங்களில் அவர் குரல் கொடுக்கவில்லை. அவருக்கு பின்னணி பாடகர் எஸ்.என் சுரேந்தரே குரல் கொடுத்திருப்பார்.

பயணங்கள் முடிவதில்லை, இதயக்கோயில், உதயகீதம், தென்றலே என்னை தொடு,மெல்ல திறந்தது கதவு, பிள்ளை நிலா,கோபுரங்கள் சாய்வதில்லை,பாடு நிலாவே, நினைக்க தெரிந்த மனமே என ஹிட் கொடுப்பதையே முழு நேர வைத்திருந்தவர் நடிகர் மோகன்.

வெள்ளிக்கிழமை ஆகி விட்டாலே மோகனின் படம் ஏதாவது ஒன்று வந்து விடும்.

மோகன் பயன்படுத்திய ஒரு அறையை இன்னும் பெருமையாக சொல்லி கொள்கின்றனர் சென்னையில் பிரபல தனியார் ஹோட்டலான பாம்குரோவ் ஊழியர்கள். 80களின் தொடக்கத்தில் இருந்து இறுதிவரை தனது சொந்த வீடு போலவே ஒரு அறையில் இருந்திருக்கிறார் மோகன்.

10 வருட காலம் உச்சக்கட்ட பிசியில் இருந்த நடிகர் மோகனாக மட்டும்தான் இருக்க முடியும்.

From around the web