மீண்டும் முக்கிய வேடத்தில் கார்த்திக்: எந்த படத்தில் தெரியுமா?

பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி, அதன் பின்னர் தமிழ்த் திரையுலகில் காதல் இளவரசனாக வலம் வந்தவர் கார்த்திக். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மணிரத்னம் இயக்கிய ’கடல்’, கேவி ஆனந்த் இயக்கிய ‘அனேகன் உள்பட ஒருசில திரைப்படங்களின் மூலம் ரீ என்ட்ரி ஆன கார்த்திக், அதன் பின்னர் ’தானா சேர்ந்த கூட்டம்’ உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்து வந்தார் இந்த நிலையில் கார்த்திக் தற்போது மீண்டும் ஒரு
 

மீண்டும் முக்கிய வேடத்தில் கார்த்திக்: எந்த படத்தில் தெரியுமா?

பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி, அதன் பின்னர் தமிழ்த் திரையுலகில் காதல் இளவரசனாக வலம் வந்தவர் கார்த்திக். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மணிரத்னம் இயக்கிய ’கடல்’, கேவி ஆனந்த் இயக்கிய ‘அனேகன் உள்பட ஒருசில திரைப்படங்களின் மூலம் ரீ என்ட்ரி ஆன கார்த்திக், அதன் பின்னர் ’தானா சேர்ந்த கூட்டம்’ உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்து வந்தார்

இந்த நிலையில் கார்த்திக் தற்போது மீண்டும் ஒரு படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். பாலிவுட்டின் சூப்பர் ஹிட் ஆன ’அந்தாதூன்’ என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக் படத்தை ஜெயம் ராஜா இயக்க போகிறார் என்பது தெரிந்ததே. இந்த படத்தில் ஹீரோவாக பிரசாந்த் நடிக்க உள்ளார். இந்த படத்தில்தான் முக்கிய கேரக்டரில் கார்த்திக் நடிக்க உள்ளதாக அதாவது அனில் தவான் நடித்த கேரக்டரில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது

இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் நடைபெற இருப்பதாகவும் இந்த படத்திற்கான லொகேஷன்கள் உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிகிறது. மேலும் இந்த படத்தின் கிளைமாக்ஸை லண்டனில் எடுக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தில் யோகிபாபு ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web