அதிமுகவை ஆதரிக்கும் நடிகர் கார்த்திக்

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக ஒரு காலத்தில் வலம் வந்தவர் நவரச நாயகன் கார்த்திக். தமிழ்ப்படங்களில் தனது சிறந்த நடிப்புத்திறனை வெளிப்படுத்தி பெயர் வாங்கிய நடிகர் முத்துராமன் மகன் என்பதால் இவருக்கு மதிப்பு அதிகம். இவர் முக்குலத்தோர் ஜாதியை சேர்ந்தவர் என்பதால் தமிழ்நாட்டில் இம்மக்கள் அதிகம் வசிக்கும் உசிலம்பட்டி பகுதியில் வெற்றிவாகை சூடும் பார்வர்டு ப்ளாக் கட்சியினர் இவருக்கு தமிழ்நாடு தலைமை பொறுப்பை வழங்கினார். அந்த கட்சியில் இவரால் கடும் குழப்பம் ஏற்பட்டது. இவரது செயல்பாடுகளும் அமைதியாக
 

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக ஒரு காலத்தில் வலம் வந்தவர் நவரச நாயகன் கார்த்திக். தமிழ்ப்படங்களில் தனது சிறந்த நடிப்புத்திறனை வெளிப்படுத்தி பெயர் வாங்கிய நடிகர் முத்துராமன் மகன் என்பதால் இவருக்கு மதிப்பு அதிகம்.

அதிமுகவை ஆதரிக்கும் நடிகர் கார்த்திக்

இவர் முக்குலத்தோர் ஜாதியை சேர்ந்தவர் என்பதால் தமிழ்நாட்டில் இம்மக்கள் அதிகம் வசிக்கும் உசிலம்பட்டி பகுதியில் வெற்றிவாகை சூடும் பார்வர்டு ப்ளாக் கட்சியினர் இவருக்கு தமிழ்நாடு தலைமை பொறுப்பை வழங்கினார். அந்த கட்சியில் இவரால் கடும் குழப்பம் ஏற்பட்டது. இவரது செயல்பாடுகளும் அமைதியாக இருந்ததால் அதில் இருந்து நீக்கப்பட்டார் கார்த்திக். அதன் பிறகு நாம் தமிழர் கட்சியை தொடங்கிய கார்த்திக் அதையும் சரிவர நடத்தாமல் குழப்பமடைந்தார்.

பின்னாளில் நாம் தமிழர் கட்சியும் கவனிப்பாரின்றி போனது. சில வருடங்களாக எந்த ஒரு அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடாமல் இருந்த கார்த்திக் தற்போது நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு தனது ஆதரவை வெளியிட்டுள்ளார்.

From around the web