விளம்பரத்துக்காக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய நடிகர் உண்மையில் இறந்த துயரம்

பூதமங்களம் போஸ்ட் என்ற படத்தில் வரதன் என்ற பாத்திரத்தில் வில்லனாக நடித்தவர் ஆர்.எஸ் கோபால். இவர் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தை சேர்ந்தவர். பானை முதல் யானை வரை கிடைக்கும் என்ற பெயரில் இவர் கடை வைத்துள்ளதால் அனைவருக்கும் தெரிந்தவர். சினிமாவிலும் ஆர்வம் உள்ளதால் இது போல சின்ன சின்ன படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார். இவர் நடித்த படத்தில் இவர் இறந்து விடுவது போல் காட்சி வரவே அதற்காக வித்தியாச விளம்பரம் செய்ய எண்ணிய
 

பூதமங்களம் போஸ்ட் என்ற படத்தில் வரதன் என்ற பாத்திரத்தில் வில்லனாக நடித்தவர் ஆர்.எஸ் கோபால். இவர் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தை சேர்ந்தவர். பானை முதல் யானை வரை கிடைக்கும் என்ற பெயரில் இவர் கடை வைத்துள்ளதால் அனைவருக்கும் தெரிந்தவர்.

விளம்பரத்துக்காக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய நடிகர் உண்மையில் இறந்த துயரம்

சினிமாவிலும் ஆர்வம் உள்ளதால் இது போல சின்ன சின்ன படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார். இவர் நடித்த படத்தில் இவர் இறந்து விடுவது போல் காட்சி வரவே அதற்காக வித்தியாச விளம்பரம் செய்ய எண்ணிய கோபால் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களை ஊரெங்கும் ஒட்டினார் அதில் படத்தின் கதாபாத்திரமான வரதன் என்ற பெயரிலேயே ஒட்டினார். இதை பார்த்த நண்பர்கள் பலருக்கு அதிர்ச்சி. பின்பு படத்துக்காக செய்யப்பட்ட விளம்பரம் என தெரிந்து கொண்டனர்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன் இவர் நிஜமாகவே உடல்நலக்குறைவால் இறந்து கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டிருந்திருக்கிறது. இதை பார்த்து யாரும் நம்பவில்லையாம். சினிமாவுக்காக இருக்கும் என நினைத்து கொண்டு இருந்திருக்கின்றனர்.

இந்நிலையில் இது சினிமா இல்லை நிஜம்தான் என அறிந்து நண்பர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

From around the web