தீனி திரைப்படத்தின்  ட்ரெய்லரை வெளியிட்டார் நடிகர் தனுஷ்....!

நடிகை நித்யா மேனன் நடித்துள்ள தீனி திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது...,
 
தீனி திரைப்படத்தைப் பற்றி கூறும் நடிகர் தனுஷின் ட்விட்டர் பக்கம்....,

ஓகே கண்மணி, காஞ்சனா 2 போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளவர் நடிகை நித்யாமேனன். இவர் பிரபல நடிகர் தளபதி விஜயுடன் மெர்சல் திரைப்படத்தில் நடித்திருந்தார் மேலும் சூர்யாவுடன் 24என்ற திரைப்படத்திலும்  நடித்திருந்தார் .தற்போது இவரது நடிப்பில் வெளியாகவுள்ள படம் தீனி. 

இவருடன் நடிகர் அசோக் செல்வன் இணைந்து நடித்துள்ளார். இவர் நடிகர் விஜய் சேதுபதியுடன் சூது கவ்வும் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.சில நாட்களுக்கு முன்பு வெளியாகிய "ஓ மை கடவுளே" என்ற இவரது திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

theeni

 நடிகை நித்யா மேனன் மற்றும் நடிகர் அசோக்செல்வன் நடித்துள்ள இத்திரைப்படத்தில் ,கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தின் கதாநாயகி, நடிகை ரிடு வர்மா  நடித்துள்ளார்.தற்பொழுது இத்திரைப்படத்தின் ட்ரெய்லரை அசுரன் நாயகனாகிய நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார் .மேலும் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் இத் திரைப்படத்தின் டிரைலரை வெளியிட்டது மிகுந்த மகிழ்ச்சியை தந்ததாக கூறியுள்ளார்.

From around the web