மனைவியுடன் விவாகரத்து பெற்ற பிரபல சீரியல் நடிகர்...

அனைவருக்கும் வணக்கம். நான் முதலில் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நீதிமன்றம் மூலம் விவாகரத்து பெற்று நாங்கள் இருவரும் முழு ஒப்புதலுடன் பிரிந்து விட்டோம்
 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த 'பகல் நிலவு' சீரியலின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் அசீம். அந்த சீரியலில் நடிகை ஷிவானியுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். அதன்பிறகு இருவரும் 'கடைக்குட்டி சிங்கம்' என்ற தொடரில் மீண்டும் நடிக்க சில எபிசோடுகளுக்குப் பிறகு அந்த சீரியல் நிறுத்தப்பட்டது. 

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைர்ல்டு கார்டு போட்டியாளராக செல்ல இருக்கிறார் என்ற தகவல் வைரலானது. அவரும் அதை ஆமோதிப்பது போலவே சில பதிவுகள் வெளியிட்டு வந்தார். பின்பு அந்நிகழ்ச்சிக்கு நுழைவதற்காக அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

இந்நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாளரான அசீம், தான்  பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வரவில்லை என்றும் சிலர் அவரை தடுப்பதாகவும் கூறி அதிர்ச்சி அளித்தார். அசீமுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் இருக்கின்றனர். 

மேலும் கருத்து வேறுபாடு காரணமாக அவர் மனைவியை பிரிந்து வாழ்வதாகவும் கூறப்பட்டு வந்த நிலையில் அவர்  தற்போது ஒரு பதிவிட்டுள்ளார்.அதில் " அனைவருக்கும் வணக்கம். நான் முதலில் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நீதிமன்றம் மூலம் விவாகரத்து பெற்று நாங்கள் இருவரும் முழு ஒப்புதலுடன் பிரிந்து விட்டோம். எனவே எனது திருமண உறவை பற்றின  கேள்விகளை எழுப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

From around the web